என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் காயம்"

    • ஜானியும், அவரது மனைவியும் உணவு சமைத்து கொண்டு இருந்தனர்.
    • முதியவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கோவை,

    ேகாவை கணபதி அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் ஜானி (வயது 69). இவரது மனைவி லில்லி மேரி. இவர்களது மகனுக்கு திருமணம் ஆகி விட்டது. அனைவரும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று அதிகாலை ஜானியும், அவரது மனைவியும் உணவு சமைத்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கியாஸ் சிலிண்டர் தீர்ந்து போனது. இதனையடுத்து வேறு ஒரு சிலிண்டரை மாற்றி சமைத்தனர். பின்னர் லில்லி மேரியும், அவரது மகனும் வேலைக்கு சென்றனர். வீட்டில் ஜானி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் சமையல் அறையில் இருந்து கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.இதில் ஜானியின் உடலில் தீ பிடித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • காரின் முன்னால் அமர்ந்து பயணம் செய்த சாலிகிராமத்தை சேர்ந்த சுப்பு என்ற 65 வயது முதியவர் பலத்த காயம் அடைந்தார்
    • அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முறிந்து விழுந்த மரம் அகற்றப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகர் முழுவதும் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதில் சுமார் 20 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. இந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், பேரிடர் மீட்பு குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு அசோக்நகர் போஸ்டல் காலனி 3-வது தெருவில் சாலையோர காய்ந்த மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது மரக்கிளை விழுந்து முன்பகுதி நொறுங்கியது.

    இதில் காரின் முன்னால் அமர்ந்து பயணம் செய்த சாலிகிராமத்தை சேர்ந்த சுப்பு என்ற 65 வயது முதியவர் பலத்த காயம் அடைந்தார். பிரபல தனியார் ஓட்டலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர் நேற்று தி.நகரில் நடந்த அந்த ஓட்டலின் புதிய கிளை திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு காரில் திரும்பியபோது தான் மரக்கிளை முறிந்து விழுந்து அவரது மார்பில் குத்தியது.

    பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரில் பயணம் செய்த முதியவர் சுப்புவின் நண்பர் ஹாரிஸ் காயமின்றி தப்பினார். இதுதொடர்பாக அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முறிந்து விழுந்த மரம் அகற்றப்பட்டது.

    சென்னை மந்தைவெளி நாட்டான் தெருவிலும் சாலையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். இதேபோன்று பல இடங்களிலும் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன.

    ×