என் மலர்
நீங்கள் தேடியது "வட மாநிலத்தவர்கள்"
- பணிக்கம்பாளையம் பாரத் நகர் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பாரத் நகர் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பெருந்துறை போலீசார் அங்கு சென்று கண்காணித்ததில் பாரத் பகுதியில் உள்ள முள்புதர் பகுதியில் சேவல் சண்டை நடைபெற்றது. இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தனிஷ் பர்மன் (30), அனோகேஷ் பைடியா (27), கமலேஷ் பைடியா (21), நஸ்ருதின் கைன் (23), முபாரக் பிஸ்வாஸ் (24), பெய்ஜிகாஜி (34), தன்மேஸ் மண்டல் (23), ரஹி மண்டல் (33), அபிக்ஜித் தாஸ் (26), தப்லு மகாஜன் (24), மனோப் மண்டல் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து பெருந்துறை போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 4 சேவல்கள், பணம் ரூ. 4,720 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- தமிழக அரசு பள்ளியில் வட மாநிலத்தவர்கள் குழந்தைகள் தமிழ் மொழியை கற்க தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.
- அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வலியுறுத்தல்.
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும், அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியை படிக்க வைப்பதாகவும் மாணவர்கள் விரும்பி படித்து நன்கு புலமை பெற்றுள்ளதாகவும் வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்குமாறும் அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவி தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.