என் மலர்
நீங்கள் தேடியது "ஆனந்த போஸ்"
- மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த போஸ் மேற்கு வங்காள கவர்னராக இன்று பதவியேற்கிறார்.
- மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா. அதிகாரி என பல பதவி வகித்தவர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் கவர்னராக மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார்.
மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் அஜய்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பொறுப்பேற்க உள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த போஸ், மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா. அதிகாரி என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
- மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் கூச்பெஹர் பகுதிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
- தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறவேண்டாம் என தேர்தல் ஆணையம் அவருக்கு அறிவுறுத்தியது.
கொல்கத்தா:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 3 தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இதற்கிடையே, மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் நாளை கூச் பெஹர் பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். கவர்னரின் இந்தப் பயணம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றது.
இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. நன்னடத்தை விதிகள் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, கவர்னருக்கும் பொருந்தும் என்பதால் கவர்னர் இதனை மீறக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
- ராஜ்பவனில் இருந்து போலீசார் வெளியேற வேண்டும் என்றார் கவர்னர்.
- முதல் மந்திரியிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநில முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். இவருக்கும் கவர்னர் ஆனந்தபோசுக்கும் இடையே பல விஷயங்களில் மோதல் இருந்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தல் முடிந்தபின் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி ராஜ்பவனுக்குச் சென்றார். ஆனால் அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அப்பகுதியில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை எனக்கூறி அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தற்போதைய பொறுப்பாளர் மற்றும் அவரது குழுவினர் இருப்பது எனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நம்புவதற்கு எனக்கு காரணங்கள் உள்ளன.
ராஜ்பவனில் கொல்கத்தா காவல் துறையிடம் நான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம் தெரிவித்தேன், ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
போலீசார் அனைவரும் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என கவர்னர் ஆனந்த போஸ் நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கவர்னர் மாளிகைக்கு செல்ல பயமாக இருக்கிறது என பெண்கள் தன்னிடம் கூறுகின்றனர்- மம்தா பானர்ஜி.
- ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கவர்னர் மாளிகை மறுப்பு தெரிவித்திருந்தது.
மேற்கு வங்காளத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஆனந்த போஸ்க்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், சமீபத்தில் நடைபெற்ற சம்பவத்தால் கவர்னர் மாளிகைக்கு செல்ல பயமாக இருக்கிறது என பெண்கள் தன்னிடம் கூறுகின்றனர் என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கவர்னர் மாளிகை கண்டனத்தை பதிவு செய்திருந்தது. மேலும், கவர்னர் உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு இன்று விசாரைணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் சுட்டிக்காட்டியதற்கு ஆளுநரின் வழக்கறிஞர் உரிய நடவடிக்கை எடுத்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என நீதிபதி கிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளார்.
செய்திகள் வெளியான அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் குறிப்பிட்டுள்ள செய்திகளை வெளியிட்டவர்களின் பெயர் மனுவில் இடம் பெறவில்லை என நீதிபதி குறிப்பிட்டார். அதற்கு ஆளுநரின் வழக்கறிஞர், அது தொடர்பான விவரங்களை இணைத்து மனுதாக்கல் செய்கிறேன் எனத் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 2-ந்தேதி ஆளுநர் மாளிகை ஒப்பந்த பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர் ஆனந்த போஸக்கு எதிராக காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு கொத்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியது.
இதனைத் தொடர்நது ஜூன் 27-ந்தேதி மம்தா பானர்ஜி அவ்வாறு கூறியதாக செய்திகள் வெளியானது. அரசியலமைப்புச் சட்டத்தின் 361வது பிரிவின்படி, ஆளுநரின் பதவிக் காலத்தில் அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர முடியாது.
- கொடூரமான சம்பவம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.
- நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு நீதி கிடைக்கும்.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது மேற்கு வங்காள அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் ஏன்? தந்தையிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கேட்டது. மேலும், மாற்றத்திற்காக நாடு இன்னுமொரு கற்பழிப்பிற்காக காத்திருக்க முடியாது என காட்டமாக தெரிவித்தது.
இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் உயிரிழந்த பெண் டாக்டரின் பெற்றோரிடம் போன் மூலம் பேசியுள்ளார். வீடியோ காலில் பேசியதை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.
ஆளுநர் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோரிடம் "நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு நீதி கிடைக்கும். இன்று (நேற்று) நான் டெல்லியில் இருக்கிறேன். இந்த விசயம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். உங்களுக்கு வசதியான நேரம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.
"தேசம், ஒட்டுமொத்த தேசமும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மிகுந்த நிம்மதியுடன் கேட்கிறது. ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு பாவிகளுக்கும் ஒரு எதிர்காலம் உண்டு. இதை நினைவில் கொள்ளுங்கள். யாராவது கேட்கிறார்களா? மம்தா பானர்ஜி தயது செய்து கையை உயர்த்துவாரா?" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் வீடியோ காலில் பேசியதை வெளியிட்டதை திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. தெரீக் ஓ'பிரைன் "இன்றைய உங்கள் வீடியோ நீங்கள் வகிக்கும் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அவமதிக்கிறது.
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையுடன் நீங்கள் தொடர்பு கொண்ட தொலைபேசி அழைப்பு உங்களால் பதிவு செய்யப்பட்டு பின்னர் பகிரங்கப்படுத்தப்பட்டது. இது நெறிமுறையற்றது. தயவு செய்து உங்களது உயர் பதவியை சுய விளம்பரத்திற்காக ஒரு பயங்கரமான சோகத்தை பயன்படுத்த வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- சந்தீப் கோஷிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை மேற்கொண்டிருந்தது.
- அவரது வீட்டிலும் சோதனை நடத்தியிருந்தது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உளள் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவர் முதல்வராக இருந்த காலத்தில் நிதி முறைகேடு மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பெண் டாக்டர் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், சந்தீப் கோஷிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியது. அவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில்தான் நேற்று சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார். நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் சந்தீப் கோஷ் மற்றும் மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ள நிலையில் "இது முடிவுக்கான ஆரம்பம்" என மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக விவரமாக ஏதும் தெரிவிக்கவில்லை.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு, ஆளுநர் மூலமாக, தங்களுடைய மகள் கொலை வழக்கில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியதாக ராஜ்பவன் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 9-ந்தேதி மருத்துவமனை செமினார் அறையில் பெண் டாக்டர் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
- தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்குவங்க கவர்னராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ராஜ் பவனில் தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்பவனில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டியின் தொடக்க விழாவை முன்னிட்டு தனது திருவுருவ சிலை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்ததை திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
இது தொடர்பாக பேசிய திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் ஜெய்பிரகாஷ், "நம் கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ் அவரது சிலையை திறந்து வைத்துள்ளார். அவருக்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காக இதை செய்துள்ளார். அவர் தனது சிலைக்கு மாலை அணிவிப்பாரா? இது தன்னை தானே உயர்வாக நினைக்கும் மனப்பான்மை" என்று தெரிவித்தார்.