என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணி தவறவிட்ட கைப்பை மீட்பு"

    • கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • சி.சி.டி.வி அமைக்கப்பட்டதன் பலனாகவும், தோட்டக்கலைத் துறை தற்காலிக ஊழியர் கலைச்செல்வியின் நன்னடத்தையாலும் வட மாநில சுற்றுலா பயணி நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்நிலையில் டெல்லியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த வட மாநில சுற்றுலா பயணி ஒருவரின் கைப்பையை பூங்காவில் தவற விட்டுச்சென்றுள்ளார். பொட்டுக்கலைத்துறை அலுவலகத்திலிருந்து பூங்கா பகுதிக்குச் சென்ற பூங்கா தற்காலிக ஊழியர் கலைச்செல்வி அந்தக் கைப்பையை கண்டெடுத்துள்ளார். அதனை பூங்கா அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் கொண்டு சேர்த்துள்ளார். அந்த பையில் தங்க வளையல்கள், பணம், செல்போன் ஆகியவை இருந்துள்ளன. பூங்காவில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவை ஆய்வு செய்தபோது கைப்பையை சுற்றுலா பயணி தவறவிட்டதை கண்டறிந்தனர்.

    இந்த நிலையில் தனது கைப்பையை காணவில்லை என பூங்காவில் நுழைந்து வந்த வட மாநில சுற்றுலா பயணி கண்டறிந்து அவரிடம் அந்த கைப்பையை கொண்டு சேர்த்தனர். அவர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற அலுவலக முக்கிய பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் பூங்கா முழுவதும் சி.சி.டி.வி அமைக்கப்பட்டதன் பலனாகவும், தோட்டக்கலைத் துறை தற்காலிக ஊழியர் கலைச்செல்வியின் நன்னடத்தையாலும் வட மாநில சுற்றுலா பயணி நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.

    இதை அறிந்த கொடைக்கானல் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கலைச்செல்வியின் நன்னடத்தை குறித்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற நல்லொழுக்கம் மிக்க தற்காலிக ஊழியரை நிரந்தர பணியாளராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×