search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபகரிக்க முயற்சி"

    • நரிக்குடி அருகே அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை அபகரிக்க முயற்சி செய்வதாக பாதிக்கப்பட்ட விவசாயி தாசில்தாரிடம் புகார் செய்தார்.
    • சர்ச்சைக்குரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள நெடுக னேந்தல் கிராமத்தை சேர்ந்த வர் முனியசாமி (வயது65), விவசாயி. இவர் கடந்த பல வருடங்க ளாக நெடுக னேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது விருதுநகரில் நடை பெற்ற புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முனியசாமி உள்பட சிலருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.

    இந்த நிலையில் தமி ழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முனியசாமிக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்பட்டதாக தெரி விக்கப்பட்டது. இதற்கி டையே முனிய சாமிக்கு வழங்கப்பட்ட இடத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து மரக்கன்றுகள் வைத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்த னர். இதற்கு முனியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு அந்த கும்பல் ெகாலை மிரட்டல் விடுத்தது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரசால் முனியசாமிக்கு வழங்கப் பட்ட சர்ச்சைக்கு ரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பாதிக்கப்பட்ட முனியசாமி குடும்பத்தினர் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • தேவகோட்டை அருகே கோவில் நிலத்தை அபகரிக்க முயன்றதாக ஊராட்சி கிளார்க் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • நடவடிக்கை எடுக்காவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இளங்குடி கிராமத்தில் ஊர் மத்தியில் கிராம தெய்வமாக விளங்கும் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முளைப்பாரி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த கிராமத்தில் பஞ்சாயத்து கிளர்க்காக இருப்பவர் சித்ரா (வயது40) இவரது வீடு கோவில் அருகே உள்ளது. இவர் தனது வீட்டின் செப்டிக் டேங்க் அமைக்க வேறு பகுதியில் இடமிருந்தும் அங்கு அமைக்காமல் கிராமக் கோவிலுக்கு எதிரில் உள்ள கோவில் நிலத்தில் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக திருவேம்பத்தூர் போலீஸ் நிலையத்திலும், தேவகோட்டை கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதில், சித்ரா கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாகவும், சர்சைக்குரிய இடத்தில் சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் சர்வே செய்து அந்த இடத்தை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருந்தனர்.இதையும் மீறி அவர் செப்டிக் டேங்க் அமைக்க முயற்சி செய்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஊராட்சி கிளார்க் சித்ரா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று தெரி வித்தனர்.

    ×