என் மலர்
நீங்கள் தேடியது "95 ஆயிரம் மனுக்கள்"
- சேலம் மாவட்டத்தில் 95 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு உள்ளது.
- ஓமலூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற பார்த்திபன் எம்.பி.இவ்வாறு தெரிவித்தார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகள் மற்றும் ஓமலூர் பேரூராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முகாமில், முதியோர் உதவிதொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்புகள், இலவச தையல் மிஷின், மருத்துவ உதவி என பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
இதில், பேசிய பார்த்திபன் எம்.பி. சேலம் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 2 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, 95 ஆயிரம் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டுள்ளது.
தொடர்ந்து அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை ரூ.4 கோடியே 10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உதவிகள் செய்யப்–பட்டுள்ளது என்றார்.
பச்சனம்பட்டியில் நடந்த முகாமில் சாலை வசதி, 3 கோவில்கள் மற்றும் ஒரு மயானத்தில் உயர்கோபுர மின் விளக்கு கேட்டு கோரிக்கை மனுவை பச்சனம்பட்டி கவுன்சிலர் பாப்பா சின்னையன் கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை, பச்சனம்பட்டி சசிகுமார் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.