என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடகள போட்டி"

    • விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
    • குழு விளையாட்டுகளில் கால்பந்து போட்டிகளில் மாணவிகள் பிரிவில் மாவட்ட அளவில் 2 வது இடமும், கோ-கோ மாணவிகள் பிரிவில் 2 வது இடமும் பெற்றுள்ளனர்.

    திருப்பூர் :

    பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கான தடகளப் போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதில் திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதில் குண்டு எறிதல் போட்டியில் ஆர்யுஸ்‌ ரோகித் என்ற மாணவர் தங்க பதக்கம் பெற்றார்.

    யுவன் பாரத் என்ற மாணவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றார். அபிகிருஷ்ணன் உயரம் தாண்டுதலில் தங்கம் பதக்கம் பெற்றார். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புவனேஸ் என்ற மாணவன் தங்க பதக்கமும், 200 மீட்டரில் வெள்ளி பதக்கமும் பெற்றார். சஞ்சய் மும்முறைத்தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 400 மீட்டரில் காயத்ரி வெள்ளிப் பதக்கமும் வெண்கல பதக்கமும் வென்றார்.

    குழு விளையாட்டுகளில் கால்பந்து போட்டிகளில் மாணவிகள் பிரிவில் மாவட்ட அளவில் 2 வது இடமும், கோ-கோ மாணவிகள் பிரிவில் 2 வது இடமும் பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் தேர்வாகியுள்ள மாணவர்களை பள்ளி நிர்வாகிகள், தாளாளர் சாமிநாதன் , மூத்த முதல்வர் மணிகண்டன், முதல்வர் சின்னையா, துணை முதல்வர் ரவி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

    • கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் சார்பில் திருவண்ணா மலையில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது.

    விழாவிற்கு மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார்.

    கலெக்டர் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து தடகள போட்டிகளை கொடிய சைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், பெண்கள் விளையாட்டு விடுதி மேலாளர் சண்மு கப்பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னதாக மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி வரவேற்றார். சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    இதில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர்.

    இன்று நடைபெற்ற போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர் மற்றும் வீராங்கனைகள் வருகிற 14-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் திருவண்ணா மலை மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வார்கள்.

    ×