என் மலர்
நீங்கள் தேடியது "வரிவிலக்கு"
- ஸ்ரீ சாய்பாபா கோவிலுக்கு, வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
- கோவில் அறக்கட்டளை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
புனே:
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள சீரடி ஸ்ரீசாய்பாபா கோயில் அறக்கட்டளைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடி வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீரடி ஸ்ரீ சாய்பாபா கோயில் அறக்கட்டளை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் ஒரு அறக்கட்டளை என்று கருதிய வருமான வரித்துறை 2015-16ஆம் ஆண்டுக்கான வரி மதிப்பீடின் போது, நன்கொடையாக பெறப்பட்ட தொகைக்கு 30 சதவீதம் வருமான வரி விதித்தது.
இதற்காக 183 கோடி ரூபாய் வரி செலுத்த வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை அடுத்து அறக்கட்டளை சார்பில், உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரி நிர்ணயம் செய்யப்படும் வரை செலுத்த வேண்டிய வரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இதை ஏற்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானை ஒரு மத அறக்கட்டளையாக ஏற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடிக்கான வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மளிகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தினார்
- மளிகை பொருட்களின் உயர்வுக்கு, பெட்ரோல், டீசல், மின்சாரம் விலை உயர்வு தான் காரணமாக அமைகிறது என்றார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வியாபாரிகள் சங்க மாவட்ட கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக இணை செயலாளர் இப்ராஹிம் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு செயலாளார் கார்மல்ராஜ் துணைத் தலைவர் தேவா, பொருளாளர் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக அரியலூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையிலான மருந்து வணிகர் சங்கத்தினர், மாநில தலைவர் விக்ரமராஜாவுக்கு நினைவு பரிசு மற்றும் சால்வை அணிவித்தனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரியலூர் மாவட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் ராஜா ஜெயராமன், மாவட்ட பொருளாளர் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.துணைத் தலைவர்கள் நடராஜ், செல்வராஜ் பி ஜி ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,பொங்கல் தொகுப்பில் மளிகைப்பொருட்களை தமிழக முதல்வர் வழங்காததை மாநில வணிகர் சங்க பேரமைப்பு வரவேற்கிறது. மேலும், மக்களுக்கு தமிழக அரசு பொங்கல் தொகுப்பாக வழங்கும் ரூ.1000 பணத்தை கொண்டு எங்களை போல சாமானிய வியாபாரிகளிடம் மக்கள் பொருட்களை வாங்க முதல்வர் வழிவகுத்துள்ளார். இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.ஆன்லைன் விற்பனை மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் நிறுவனங்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இழப்பு கணக்கை அரசுக்கு காட்டுவதுடன், பணியாளர்கள் 10,000 பேரை திடீர் என வேலையை விட்டு நீக்கியுள்ளனர். இது மக்களை ஏமாற்றும் வேலை.சந்தையில் விற்கப்படும் எண்ணெயை ஆய்வு செய்யும் அதிகாரிகள், தரமற்ற எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் இடத்தை கண்டறிந்து தடை செய்ய வேண்டும். பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மளிகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். மளிகை பொருட்களின் உயர்வுக்கு, பெட்ரோல், டீசல், மின்சாரம் விலை உயர்வு தான் காரணமாக அமைகிறது என்றார். முடிவில் துணைச் செயலாளர் வியாகுலம் நன்றி கூறினார்.
- இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி
- பிரிவு 10(17A) இன் கீழ் உள்ள விலக்கு பொருந்தாது
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் குகேஷ் சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ் சுமார் ரூ. 11 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளார். அதாவது இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி.
போட்டியின் விதிமுறைப்படி 13 சுற்றுகளில் யார் முதலில் 6.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாகக் கருதப்படுவார்கள். விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வெற்றிக்கும் அந்த வீரருக்கு சுமார் ரூ.1.68 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை இருவருக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படும்.

அந்த வகையில், குகேஷ் மொத்தம் மூன்று வெற்றிகளைப் பெற்று இருந்த நிலையில் அவருக்கு ரூ.5.04 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. டிங் லிரன் இரண்டு வெற்றிகளைப் பெற்ற நிலையில், அவருக்கு ரூ. 3.36 கோடி கிடைத்தது. மீதமுள்ள பரிசுத் தொகை இருவருக்கும் இடையே சரி சமமாகப் பிரித்துத் தரப்பட்டது.
இதன் மூலம் குகேஷ் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மூலமாக ரூ. 11.34 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெற்று இருக்கிறார். இந்த முழு தொகை குகேஷுக்கு அப்படியே போகாது என்றும் வரி பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10(17A) இன் கீழ், மத்திய அரசு, மாநில அரசு வழங்கியிருந்தால், பொது நலன் கருதி விருது அல்லது வெகுமதியாக, பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்கப்படுவதற்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இருப்பினும், குகேஷுக்கு வழங்கப்பட்ட விருதை சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) வழங்கியுள்ளது, இது செஸ் விளையாட்டிற்கான உலகளாவிய நிர்வாக அமைப்பாகும், இது இந்திய மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக தகுதி பெறவில்லை.
எனவே, பிரிவு 10(17A) இன் கீழ் உள்ள விலக்கு பொருந்தாது, ஏனெனில் இந்த ஏற்பாட்டின் பயன் இந்திய அரசு அதிகாரிகள் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் விருதுகளுக்கு மட்டுமே.

இந்த நிலையில், குகேஷ் பரிசுத் தொகையான ரூ.11 கோடியில் ரூ.4 கோடியை வரியாக செலுத்துகிறார் என்று தகவல் பரவியது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதினார்.
மேலும் சில அரசியல் தலைவர்களும் இணைய வாசிகளும் இதுகுறித்து கவலை தெரிவித்தனர். இந்நிலையில் குகேஷின் பரிசுத்தொகையில் ரூ. 4 கோடி வரி பிடித்தம் செய்யாமல் விலக்கு அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக பேசிய அமைச்சக அதிகாரி ஒருவர், நாட்டிற்கு குகேஷ் கொண்டு வந்த மகத்தான பெருமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
அவரது வெற்றிகளுக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிப்பது மிகவும் பொருத்தமானது, மேலும் அவர் தனது எதிர்காலத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தவும், அவரது திறனை மேம்படுத்தவும் அது அனுமதிக்கும் என்று கூறியிருக்கிறார்.