search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிபொருள் மையம்"

    • கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
    • மேல்மலை கிராம பகுதியில் எரிபொருள் மையம் ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேல்மலை விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வட்டாட்சியர் முத்துராமன்,வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள்,வனத்துறை ஊழியர்கள்,மருத்துவத்துறையினர்,வருவாய்த் துறையினர், வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல் மேல்மலைகிராமங்களுக்கு செல்லும் தார் சாலைகள் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையப்பகுதியில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் விவசாய பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வது மிகவும் கடினமானதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். எனவே மேல்மலை கிராம பகுதியில் எரிபொருள் மையம் ஒன்று அமைக்க வேண்டும் என்றனர்.

    மேல்மலை கிராமப் பகுதியில் விவசாயப் பொருள்களை எடுத்து கொண்டு செல்லும்போது எரிபொருள் நிரப்புவதற்கு கொடைக்கானலுக்கு வர வேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது. விவசாய மோட்டார்களுக்கும், விவசாய வேலைகளுக்காக டிராக்டர் போன்றவைகளை பயன்படுத்தவும்,விவசாயப் பொருள்களை ஓட்டி செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதிலும் கடும் சிரமம் உள்ளது என்றனர்.

    மேலும் மேல்மலைப் பகுதியில் இருந்து வாகனங்களில் காய்கறிகளை கொண்டு வரும்போது அப்சர்வேட்டரி பகுதியிலிருந்து மூஞ்சிக்கல் சந்திப்பு வரை சாலையில் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருவதாகவும் இதற்கு தக்க தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    உடனே நகராட்சி பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பேசக்கூடாது என்று கோட்டாட்சியர் அறிவுறுத்தினார்.

    ×