search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாமியா பள்ளி"

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • துணை முதல்வர் லினிமோல், அபாகஸ் பயிற்சி ஆசிரியர் உமர் சரிப் ஆகியோர் பாராட்டினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் தொடக்க பள்ளியில் மாவட்ட அளவி லான அபாகஸ் போட்டி நடைபெற்றது. மாவட்ட அளவில் 21 பள்ளிகளில் இருந்து 787 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் படிக்கும் 9 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 4 மாணவர்கள் சாம்பியன் பட்டமும், மற்ற மாணவர்கள் முதல் 3 இடங்களிலும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர் களை பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்றாகீம், பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், துணை முதல்வர் லினிமோல், அபாகஸ் பயிற்சி ஆசிரியர் உமர் சரிப் ஆகியோர் பாராட்டினர்.

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் விழாவில் யூ.கே.ஜி. முடித்த 180 குழந்தைகளுக்கு பட்டம் கொடுத்தனர்.
    • இதில் 150-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் யூ.கே.ஜி. வகுப்பு முடித்து முதலாம் வகுப்பு செல்லும் குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் 44-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள எம்.எம்.கே. அரங்கத்தில் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் தலைமையில் நடந்தது.

    அவர் பேசுகையில், மகான், மேதை, கல்வி யாளர்கள் வாழ்ந்து முக்கியத்துவம் பெற்ற கீழக்கரையில் சொல்ல முடியாத அளவிற்கு இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது வருத்தமளிக்கிறது. உங்கள் குழந்தைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளை தாலாட்ட கூட நேரமில்லாத நிலையில் பெண்கள் இருந்து வருவது வேதனைக்குரியது. தாய், தந்தையரின் உறவே குழந்தைகளுக்கு கிடைக்காமல் கேள்விக்குறியாகி வருகிறது என்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் கலந்துகொண்டு மாணவ குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    8-ம் வகுப்பு மாணவிகள் பாத்திமா நப்ஹா, ஜென்னத் ரிலா, பரிஹா சுமையா ஆகியோர் கிராஅத் ஓதினர். யூ.கே.ஜி. மாணவி அஷ்பஹ் வரவேற்றார். மாணவ குழந்தைகள் ஆங்கிலத்தில் பட்டமளிப்பு விழா உரையாற்றினர். 180 மாணவ குழந்தைகளுக்கு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் சுந்தரம், கீழக்கரை ரோட்டரி சங்க சட்ட ஆலோசகர்-வக்கீல் கேசவன், சமூக ஆர்வலர் நஜீம் மரைக்கா உட்பட பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    அப்துல் பத்ஹா நன்றி கூறினார். குழந்தைகள் பட்டம் பெறுவதை காண்பதற்கு பெற்றோர்கள் திரண்டு வந்தனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

    விழா ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம் ஆலோசனையின் பேரில் முதல்வர் மேபல் ஜஸ்டஸ், தலைமையில் துணை முதல்வர்கள் லினி, ராமர் தலைமை ஆசிரியர்கள் முகம்மது முஸ்தபா, ரவி, தனலட்சுமி, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.

    முன்னதாக காலையில் நடந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம் தொடங்கி வைத்தார். திட்ட இயக்குநர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அறிவியல், என்ஜினீயர், மெக்கானிக், சட்டம் குறித்த தகவல்களையும், எதிர்காலத்தில் மாணவ-மாணவிகளுக்கு உள்ள வேலை வாய்ப்பு நிலவரங்களையும் எடுத்துரைத்தார்.

    மாணவ-மாணவிகளின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். இதில் 150-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
    • பால் பொங்குகின்ற நேரத்தில் மாணவிகள் மகிழ்ச்சியுடன் குலவையிட்டு பொங்கலை வரவேற்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மக்களின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், கீழக்கரை ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் கிளை மற்றும் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவ னங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

    கல்வி நிறுவனங்களின் தலைவர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார்.

    மாணவ-மாணவி களுக்கு பொங்கல் குறித்த ஓவியம் வரைதல், பானை அலங்காரம், "விவசாயம் காப்போம்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

    இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளில் சேர்ந்த 590 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் கரும்புகள், தோரணங்கள் கட்டப்பட்டு பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பால் பொங்குகின்ற நேரத்தில் மாணவிகள் மகிழ்ச்சியுடன் குலவையிட்டு பொங்கலை வரவேற்றனர்.

    இதைத் தொடர்ந்து பெற்றோர்களுக்கான வினாடி வினா போட்டி, ஆசிரியர் ஆசிரியைக ளுக்கான பல்வேறு போட்டி கள் நடந்தது.

    மாலை யில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் பெருவிழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராகிம் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சமூக ஆர்வலர் சலிமுல்லா ஹ்கான், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் சேர்மன் சுந்தரம், ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் கபீர் வரவேற்றார்.

    கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் உசேன், சொக்க நாதர் கோவில் குருக்கள் வன்மீகநாதன், கீழக்கரை தென்னிந்திய திருச்சபை ஆயர் விஜயகுமார், புனித அந்தோணியர் ஆலயம் பங்குத்தந்தை ரெமிஜியஸ், கீழக்கரை துணை வட்டாட்சியர் பழனிக்குமார், இயற்கை ஆர்வலர் மன்மோகன் சிங் ஆகியோர் பேசினர்.

    பள்ளியின் தாளாளர் எம், எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தீப்பந்தம் சுழற்றி பார்வையாளர்களின் பாராட்டுதலை பெற்றார்.

    விழாவில் கீழக்கரை நகர்மன்றத் தலைவர் செகானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான், 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகம்மது காசிம், முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் எபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் செய்தனர்.

    • இஸ்லாமியா பள்ளி மாணவ- மாணவிகள் கராத்தே, சிலம்பம் போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
    • இதேபோல் கட்டா, கும்தே பிரிவில் 3-வது இடம் பெற்று மாணவி ஹர்ஷிகா சாதனா சாதனை படைத்தார்


    சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

     கீழக்கரை

    சென்னை நீலாங்கரையில் உள்ள புத்தாக்க மையத்தில் 46-வது தேசிய கராத்தே போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி 7-வது வகுப்பு மாணவி ஹர்ஷிகா சாதனா, 8-வது வகுப்பு மாணவி ஹேமா வர்ஷினி, ஹேமா வர்ஷினி ஆகியோர் கட்டா பிரிவில் 2-வது இடமும், கும்தே பிரிவில் 3-வது இடமும் பெற்று சாதனை படைத்தனர். இதேபோல் கட்டா, கும்தே பிரிவில் 3-வது இடம் பெற்று மாணவி ஹர்ஷிகா சாதனா சாதனை படைத்தார்

    பரமக்குடியில் நடை பெற்ற தேசிய அளவிலான 14 வயதுக்குட்பட்டோர் தனி நபர் பிரிவில் இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைபள்ளி, 10-ம் வகுப்பு மாணவன் கதிர்வேல் தென்னிந்திய அளவில் 3-ம் இடமும், மாவட்ட அளவில் 3-ம் இடமும் மற்றும் 9-ம் வகுப்பு மாணவன் மோஹித் மாவட்ட அளவில் (அடிமுறை) 2-ம் இடமும் பெற்றனர்.

    மேலும் தென்னிந்திய அளவில் 13 வயதுக்கு உட்பட்டோர் (ஒத்த கம்பு) பிரிவில் 6- வகுப்பு மாண வன் சக்தி வீர கணபதி தென்னிந்திய அளவில் முதல் இடமும், மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்றார்.

    மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் மற்றும் முதல்வர் மேபல் ஜஸ்டஸ், ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.


    ×