என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி"
- அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெற உள்ளது.
- பா.ஜ.க அரசு பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது. இதில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு ஜனவரி மாதம் விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. இதேபோல் அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் மோடி பலரை களத்தில் இறக்கினாலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தி.மு.க, காங்கிரஸ் ஒன்று சேர்ந்து மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் பணியை மேற்கொள்வோம்.
சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து பா.ஜ.க அரசு பழிவாங்கும் நோக்கோடு செயல் பட்டு வருகிறது. தி.மு.க. கூட்டணியில் கலவரத்தை ஏற்படுத்த முடியாதா?, குழப்பத்தை ஏற்படுத்த முடியாதா என பலர் ஏங்கி வருகின்றனர்.
திருமாவளவன் பேட்டி கொடுத்தால் அணி மாறுகிறார் என்றும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் கூட்டணியில் குழப்பம் என பேசி வரும் எடப்பாடி, நாங்கள் வருகின்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்போம் என கூறுகிறார்.
முதலில் அவருடைய கட்சி வலுவான கட்சியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். உங்களிடம் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, ஓ.பி.எஸ், தினகரன் உள்ளிட்டவர்களை ஒன்றாக சேர்க்க முடியாதவர்கள் வலுவான கூட்டணியை எப்படி அமைக்க முடியும்.
பா.ஜ.க.வுக்கு எதிராக நாங்கள் ஒன்றாக சேர்ந்துள்ளோம். எங்கள் கூட் டணி வலுவாக உள்ளது. மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக இருப்போம். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை நுழைய விடமாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளார்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தெரிந்து கொண்டோம்.
- சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தொல்.திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
சிதம்பரம்:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அவரது மனைவி ஜான்சிராணியுடன் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினார்.
பின்னர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் காலையிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டை விட இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வெற்றி பெறும். சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தொல்.திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளார்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தெரிந்து கொண்டோம். வட இந்தியாவில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் சூழ்நிலையில் 2019-ல் வட இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றார். அதேபோல் இம்முறை வெற்றி பெற வாய்ப்பு இல்லை.
கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது, மதசார்பின்மையை பாதுகாப்பது, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பது, இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாப்பது, மக்களுடைய வாழ்வாதாரம், வேலை இல்லா திண்டாட்டம் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தோம். இந்த பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது.
- மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது.
இந்த முறை கோவை தொகுதியை தி.மு.க. தனக்கு வைத்துக்கொண்டு அதற்கு பதில் திண்டுக்கல் தொகுதியை கொடுத்து இருக்கிறது.
திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 35 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து மீண்டும் போட்டியிட உள்ளது. 1977-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது. அப்போது அ.தி.மு.க. வேட்பாளரிடம் கம்யூனிஸ்டு வேட்பாளர் தோல்வியை தழுவினார்.
1989-ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்ட போது மீண்டும் தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கிய கம்யூனிஸ்டுக்கு தோல்வியே கிடைத்தது. கடந்த 2014-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட்டு 1.81 சதவீத வாக்குகளே பெற்றது.
இந்த நிலையில் தற்போது தி.மு.க. கூட்டணியில் 4-வது முறையாக திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்டமான வெற்றி பெற்று இருந்தார்.
எனவே இந்த தடவை மிக எளிதான வெற்றியை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பெற முடியும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் நம்புகிறார்கள். அதற்கு ஏற்ப வேட்பாளர்களை தேர்வு செய்ய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் தொகுதியில் இதுவரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது இல்லை. ஆனால் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் 7 தடவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. எனவே இந்த தடவை நிச்சயம் வெற்றியை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் உள்ளனர்.
இதற்காக 3 பேர் பெயரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் வேட்பாளராக தேர்வு செய்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பாண்டிக்கு வாய்ப்பு கொடுக்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையே தீக்கதிர் பத்திரிகை ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று பரிசீலனை செய்யப்படுகிறது. மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது. எனவே மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மதுரை தொகுதியில் தற்போது சு.வெங்கடேசன் எம்.பி.யாக உள்ளார். அவரையே மீண்டும் மதுரை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் சு.வெங்கடேசன் எம்.பி. மதுரை தொகுதிக்கு மிக சிறப்பான சேவை செய்திருப்பதாக தி.மு.க. தலைவர்கள் பாராட்டுகிறார்கள். குறிப்பாக முக்கிய பிரச்சனைகளை உடனுக்குடன் வெளியில் தெரிவித்து அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக சு.வெங்கடேசனுக்கு நல்ல பெயர் உள்ளது.
அவரையே மீண்டும் களம் இறக்குமாறு தி.மு.க. தரப்பில் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
- மதுரை எய்ம்ஸ் பணிகளை உடனடியாக தொடங்ககோரி வருகிற 24-ந்தேதி சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மதுரையில் கையில் செங்கல் ஏந்தி போராட்டம்.
- கோவையில் அடுத்த மாதம் இறுதியில் தொழில் பாதுகாப்பு மாநில சிறப்பு மாநாடு நடத்துவது என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மத்திய அரசு உடனடியாக கவர்னரை திரும்ப வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம், மதுரை எய்ம்ஸ் பணிகளை உடனடியாக தொடங்ககோரி வருகிற 24-ந்தேதி சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மதுரையில் கையில் செங்கல் ஏந்தி போராட்டம், கோவையில் அடுத்த மாதம்(பிப்ரவரி) இறுதியில் தொழில் பாதுகாப்பு மாநில சிறப்பு மாநாடு நடத்துவது என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சம்பத், வாசுகி, சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- ரஷ்யப்புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலனை முன்மொழிந்தது.
- இங்கிலாந்து புரட்சி, அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன.
திருப்பூர் :
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 105- வது நவம்பர் புரட்சி தின செந்தொண்டர் பேரணி, பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இங்கிலாந்து புரட்சி, அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவை அந்தந்த நாடுகளின் நலன்களை மட்டும் சார்ந்தவை. அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமான சில உரிமைகளைப் பெற்றுத் தந்தவை. அந்த நாடுகளின் எல்லைகளுக்குள் மட்டும் அதிர்வை உண்டாக்கியவை. ஆனால் 1917 நவம்பர் 7-ந் தேதி ரஷ்யாவில், லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்யப்புரட்சி, இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அந்தப் புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலனை முன்மொழிந்தது.அதனால் அந்த புரட்சியின் அதிர்வுகள் உலகம் முழுவதும் உணரப்பட்டது.
உலகில் உரிமைகளுக்காகப் போராடும் சக்திகள் அனைத்துக்கும் பல படிப்பினைகளை கொடுத்தது.தொழிலாளர்கள் நலன், பெண் உரிமை, முற்போக்கு சிந்தனை, அறிவியல் வளர்ச்சி, திட்டமிடப்பட்ட பொருளாதாரம், உலக சமாதானம் என ரஷ்ய புரட்சி பல்வேறு தளங்களில் முன் மாதிரிகளை உருவாக்கி தந்தது. அந்தப்புரட்சியை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து இன்று 27ந்தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் செந்தொண்டர் பேரணி புஸ்பா தியேட்டர், குமரன் சாலை வழியாக நொய்யல் யுனிவர்சல் தியேட்டர் அருகே வந்து நிறைவு பெறுகிறது. பின்னர் அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு செ. முத்துக்கண்ணன் தலைமையேற்கிறார். . தெற்கு நகர செயலாளர் ஜெயபால் வரவேற்கிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தா காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் மாநில செயற்குழு ஜி. சுகுமாறன் , கோவை எம். பி., பி. ஆர். நடராஜன், மாநிலக்குழு கே. காமராஜ், தீக்கதிர் முதன்மை செயலாளர் என். பாண்டி, பொது மேலாளர் எஸ். ஏ. மாணிக்கம் , சி. மூர்த்தி, மாவட்ட செயற்குழு எஸ். ஆர். மதுசூதனன், மாவட்டக்குழு ஏ.ஷகிலா ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். ராஜகோபால், கே. உண்ணிகிருஷ்ணன், கே. ரங்கராஜ், ஜி. சாவித்திரி, எஸ். சுப்பிரமணியம், ஆர். குமார். ச. நந்தகோபால், எஸ். மணிகண்டன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் இடைக்குழு செயலாளர்கள் என். கனகராஜ், பி. ஆர். கணேசன், ஆர். காளியப்பன், கே. திருவேங்கடசாமி, பொறுப்பு செயலாளர் ஏ. ஈஸ்வரமுர்த்தி, கி. கனகராஜ், என்.சசிகலா, கே. தண்டபாணி, எஸ்.கே. கொளந்தசாமி, கோ. செல்வன், ஆர்.வி.வடிவேல், ஆர். பாலன் ஆகியோர் பங்கேற்கின்றனர். முடிவில் பல்லடம் தாலுகா செயலாளர் பரமசிவம் நன்றி கூறுகிறார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்