search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதியார் வீடு"

    • தற்போது அந்த வீட்டில் பாரதியாரின் வழி வந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
    • பாரதி சிலையுடன் கூடிய நூலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன

    உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ் ராஜலிங்கம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இங்கு மகாகவி பாரதியார் 4 ஆண்டுகள் வாழ்ந்த வீடான சிவமடத்தை புதுப்பிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து  மேலும் அவர் கூறியுள்ளதாவது:

    பாரதியார் இங்கு இருக்கும் போது, அவருக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாகவே நான் கருதுகிறேன். அந்த வீட்டில் தற்போது பாரதியாரின் வழி வந்தவர்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் அவர்களின் அனுமதியோடு சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம். 


    சமூக அவலங்களையும், அந்த காலகட்டத்தில் இருந்த சமுதாயப் பிரச்சினைகளையும் பாரதியார் எப்படி தனது கவிதைகள் மூலம் அணுகினார் என்ற முக்கியத் தகவல்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது இலக்கியப் படைப்புகள் டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்படும்.

    பாரதி வாழ்ந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் பாரதியின் மார்பளவு வெண்கலச் சிலையுடன்கூடிய நூலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×