என் மலர்
நீங்கள் தேடியது "மன்மோகன்சிங்"
- பொருளாதார நிபுணர் ஆட்சியில் 10வது இடத்தை பிடிக்க 10 ஆண்டுகள் ஆனது.
- டீ விற்றவர் ஆட்சியில் 10ல் இருந்து 5வது இடத்தை அடைய 8 ஆண்டுகள் ஆனது.
குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில். ராஜ்கோட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
2014 ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவி ஏற்கும் முன், 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர் (மன்மோகன் சிங்) நமது பிரதமராக இருந்தார்.
இந்திய பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. அடுத்த ஆண்டுகளில், அவர்கள் என்ன செய்தாலும், இந்தியப் பொருளாதாரம் பத்தாவது இடத்திற்கு மாறியது. இதன் மூலம் 11வது இடத்தில் இருந்த இந்தியா பொருளாதாரம், 10வது இடத்தைப் பெற பத்து ஆண்டுகள் ஆனது.
2014-ல் நீங்கள் ஒரு சாய்வாலாவுக்கு (டீ விற்பவர்) ஆட்சியைக் கொடுத்தீர்கள். நான் ஒரு பொருளாதார நிபுணர் என்று ஒரு போதும் கூறவில்லை. ஆனால், மக்களின் பலம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியது.
11வது இடத்தில் இருந்து 10வது இடத்தைப் பிடிக்க பத்து ஆண்டுகள் எடுத்துக் கொண்ட (காங்கிரஸ்) ஆட்சியையும், 10வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்தை அடைய எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட (பாஜக) ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர்.
- மன்மோகன் சிங் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.
இந்த நிலையில், மன்மோகன் சிங் அற்புதமான மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர். அவரின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறினார்.
- மன்மோகன்சிங் குடும்பத்தினர் விரும்பிய இடத்தை ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்தது.
- மத்திய அரசு ஒதுக்கிய இடம் 900 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் கடந்த டிசம்பர் 26-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு டெல்லி நிகாம்போத் சுடுகாட்டில் இறுதிச்சடங்குகள் நடந்தன. பொது சுடுகாட்டில் இறுதிச்சடங்குகள் நடத்துவதா என்று காங்கிரஸ் கட்சி ஆட்சேபனை தெரிவித்தது.
மன்மோகன்சிங்குக்கு நினைவிடம் கட்டும் இடம் தொடர்பாகவும் கருத்து வேறுபாடு எழுந்தது. முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள் பலரது நினைவிடங்கள் அமைந்துள்ள ராஷ்டிரீய ஸ்மிரிதி ஸ்தலத்தில் மன்மோகன்சிங் நினைவிடத்துக்கு இடம் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டது.
மன்மோகன்சிங் குடும்பத்தினர் விரும்பிய இடத்தை ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்தது.
இந்நிலையில், மத்திய அரசு ஒதுக்கிய இடத்தை மன்மோகன்சிங் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். இதுதொடர்பாக அவர்கள் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி, தங்களது சம்மதத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும், மன்மோகன்சிங்கின் 3 மகள்களும், அவர்களுடைய கணவன்மார்களும் அந்த இடத்தை நேரில் பார்த்துள்ளனர். இதனால் இதுதொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
மத்திய அரசு ஒதுக்கிய இடம் 900 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நினைவிடம் அருகே அமைந்துள்ளது.
அடுத்த நடவடிக்கையாக, மன்மோகன்சிங் நினைவாக ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கும். அதில் உறுப்பினர்களாக யார் யாரை நியமிப்பது என்று மன்மோகன்சிங் குடும்பத்தினர் தெரிவிப்பார்கள். அறக்கட்டளை பெயருக்கு நிலத்தின் உரிமையை மத்திய அரசு மாற்றும்.
அதைத்தொடர்ந்து, நினைவிடம் கட்ட மத்திய அரசு ரூ.25 லட்சம் மானியத்தை விடுவிக்கும். கட்டுமான பணியில் ஈடுபட உள்ள மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே அந்த இடத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர்.