என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவநேய பாவாணர்"

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் அமைத்து திறந்து வைத்தார்.
    • பரிபூரணம் இறப்பிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    சங்கரன்கோவில்:

    தமிழ் மொழியின் சிறப்புகளைப் போற்றி வளர்த்ததோடு அதனை உலகறிய செய்த தமிழறிஞர் பெருமக்கள் பலரில் தேவநேய பாவாணர் குறிப்பிடத்தக்கவர். இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதிமுத்துபுரத்தில் பிறந்தவர்.

    தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காவும், ஆராய்ச்சிக்காகவும் செலவழித்தவர். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்தது. அதை ஏற்று 2007-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மதுரை அண்ணா நகரில் ரூ.40 லட்சம் செலவில் தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் அமைத்து திறந்து வைத்தார்.

    அந்த மணிமண்டபத்தை பராமரிக்கும் பொறுப்பை பாவாணரின் பேத்தி ஏ.எம்.டி.பரிபூரணத்திடம் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஒப்படைத்தார். அதற்காக பரிபூரணத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணி ஆணை வழங்கினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பரிபூரணம் உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அவரது மறைவை ஒட்டி சங்கரன்கோவில் அருகே உள்ள ஆண்டார்குளம் கிராமத்தில் உள்ள இல்லத்து க்கு சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ நேரில் சென்று பரிபூரணம் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது தேவநேய பாவாணர் குடும்பத்தினர் மறைந்த பரிபூரணத்திற்கு அப்போதய முதல்-அமைச்சர் கருணாநிதி அரசு வேலை வழங்கியதை போல அவரது மகளான மனோசாந்திக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×