என் மலர்
முகப்பு » ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
நீங்கள் தேடியது "ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி"
- தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திண்டுக்கல்லில் இருந்து மதுரை வழியாக சென்ற ரெயில் மூதாட்டி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மனைவி சபரியம்மாள்(72). இவர் தனது வீட்டிலிருந்து தோட்டத்திற்கு செல்வதற்காக அம்பாத்துரை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை வழியாக சென்ற ரெயில் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் ராஜேஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
×
X