என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்ஜெஸ்லி மருத்துவமனை"

    • நாகர்கோவில் பார்வதிபுரத்தில் பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
    • ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு உடனடியாக ரத்தக்குழாயில் ஸ்டென்டிங் போடப்பட்டு ரத்தக்குழாய் அடைப்பு நீக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரத்தில் பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9-ந்தேதி 62 வயது முதியவர் ஒருவர் நெஞ்சுவலி மற்றும் மூச்சுதிணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அதன்பின்னர் அவருக்கு டாக்டர்கள் இ.சி.ஜி. மற்றும் எக்கோ பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு மேஜர் மாரடைப்பு வந்தது தெரியவந்தது. பின்னர் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதில், இதயத்தில் உள்ள ரத்தக்குழாய் முழுவதும் கொழுப்பு மற்றும் த்ரோம்பஸால் அடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக ரத்தக்குழாயில் ஸ்டென்டிங் போடப்பட்டு ரத்தக்குழாய் அடைப்பு நீக்கப்பட்டது. அதன்பிறகு அவருக்கு நெஞ்சுவலி முழுமையாக குறைந்து விட்டது. மறுநாள் அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். இப்போது அவர் நலமாக உள்ளார். 62 வயது முதியவரின் ரத்தக்குழாய் அடைப்பை நீக்கி பொன் ஜெஸ்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    • வயிற்றில் மண்ணீரலையொட்டி இருந்த 26x20x16 செ.மீ. என்ற அளவிலான கட்டியை அகற்றினர்.
    • 15 வயது பெண்ணுக்கு அகற்றப்பட்டுள்ள கட்டி உலக அளவில் இதுவரை அகற்றப்பட்ட நீர்கட்டிகளிலேயே மிகப்பெரியதாகும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தை சேர்ந்த 15 வயது பெண் ஒருவர் வயிறு வீக்கம் மற்றும் வலியால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்தார். இவர் நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அவரை டாக்டர்கள் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்தபோது மண்ணீரலில் பெரிய அளவிலான கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து கல்லீரல் மற்றும் குடல் அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் கரிகால் சக்ரவர்த்தி தலைமையிலான குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவரது வயிற்றில் மண்ணீரலையொட்டி இருந்த 26x20x16 செ.மீ. என்ற அளவிலான கட்டியை அகற்றினர். இதன் எடை 5 கிலோவாகும்.

    இது உலகிலேயே இதுவரை வயது குறைந்த பெண்ணின் வயிற்றில் இருந்த அகற்றப்பட்ட நீர் கட்டிகளில் மிகப்பெரிய கட்டியாகும். இதன்மூலம் நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷா லிட்டி ஆஸ்பத்திரி டாக்டர் கள் சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளனர்.

    இது குறித்து டாக்டர் கரிகால் சக்ரவர்த்தி கூறியதாவது:– மண்ணீரலில் இருக்கும் 15 செ.மீ. அளவு அல்லது அதற்கு மேலான அளவுள்ள நீர்கட்டி ராட்சத கட்டி என்று அழைக்கப்படும். இதுவரை மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில் உள்ள பதிவுகளின்படி கடந்த 2014ல் பாகிஸ்தானை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கு 27x20 செ.மீ. அளவிலான கட்டி அகற்றப்பட்டிருக்கிறது. அதுபோல் 2021ல் ஆஸ்திரே லியாவை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு 26x26x28 செ.மீ. என்ற அளவிலான கட்டி அகற்றப்பட்டிருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வரிசையில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷா லிட்டி ஆஸ்பத்திரியில் 15 வயது பெண்ணுக்கு அகற்றப்பட்டுள்ள கட்டி உலக அளவில் இதுவரை அகற்றப்பட்ட நீர்கட்டிகளிலேயே மிகப்பெரியதாகும்.

    மண்ணீரலில் திட மற்றும் திரவ கட்டி என இருவகை கட்டிகள் உருவாகும். நீர் கட்டிகள் 5 செ.மீ. அளவுக்கு பெரியதாக இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். கட்டியை மட்டும் அல்லது பாதி மண்ணீரலை நீக்கலாம். அல்லது கட்டியின் அளவை பொறுத்து முழு மண்ணீரலையும் நீக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

    மண்ணீரலை நீக்குவதால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மண்ணீரலை நீக்குவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    ×