என் மலர்
நீங்கள் தேடியது "ஆபத்தான"
- சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
- மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் நடைபாதை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் நடப்பதற்கு இடையூறாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தவறி விழுந்து காயமடையும் அபாயம் நிலவுகிறது. இது மட்டுமின்றி பள்ளி கட்டிடத்தின் முன் பகுதியில் மின்மாற்றி ஒன்று உள்ளது. ஆனால் இதற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை. எனவே மழைக்காலங்களில் அதனருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிக்கு செல்லும் சாலையை புதுப்பிக்க வேண்டும், குடிநீர் குழாய்களை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும், மின்மாற்றியை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.