என் மலர்
நீங்கள் தேடியது "ஓகி புயல்"
- நவம்பர் 30 ம் தேதி ஏற்பட்ட ஓகி புயல் தாக்குதலில் குமரி மாவட்டம் மற்றும் வெளி மாநில, மாவட்ட மீன் பிடித்தொழிலாளர்கள் 224 பேர் பலியாயினர்.
- 5 ம் ஆண்டு நினைவு நாள் தெற்காசிய மீனவ தோழமை கூட்டமைப்பு சார்பாக குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் விசைப்படகில் கடைப்பிடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் கடந்த 2017 நவம்பர் 30 ம் தேதி ஏற்பட்ட ஓகி புயல் தாக்குதலில் குமரி மாவட்டம் மற்றும் வெளி மாநில, மாவட்ட மீன் பிடித்தொழிலாளர்கள் 224 பேர் பலியாயினர்.
இதில் குமரி மாவட்ட மீனவர்கள் 177 பேர் ஆவர்.ஓகி புயல் தாக்கி கடலில் பலியான மீனவர்களுக்கு 5 ம் ஆண்டு நினைவு நாள் தெற்காசிய மீனவ தோழமை கூட்டமைப்பு சார்பாக குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் விசைப்படகில் கடைப்பிடிக்கப்பட்டது.
விசைப்படகில் அமைக்கப்பட்டிருந்த பலியான மீனவர்களின் உருவ படத்திற்கு உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதில் தெற்காசிய மீனவ தோழமை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சர்ச்சில், செயலாளர் ரீகன் உள்பட மீனவர்கள் கலந்து கொண்டனர்.