என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோபிநாத்"
- பிள்ளைகள் மொபைல் போன் நோண்ட கூடாது என்று தாய்மார்கள் விரும்பினால் அவர்கள் சீரியல் பார்க்கக்கூடாது.
- பிள்ளைகள் குற்றவாளிகள் இல்லை அவர்கள் சமூகத்தின் நெருக்கடிக்குள் இருக்கிறார்கள்
பெற்றோர்கள் வீட்டில் சீரியல் பார்த்தால் பிள்ளைகள் எப்படிப் படிப்பார்கள்? என்று நீயா நானா புகழ் கோபிநாத் கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றிய கோபிநாத்,
ஒரு குழந்தையை தந்தை மேலே தூக்கிப்போட்டு பிடிக்கும்போது அது சிரித்துக்கொண்டே மேலே சென்று சிரித்துக்கொண்டே கீழே வரும். தந்தை அவ்வாறு செய்யும்போது தாய் கேள்வி கேட்பார் 'ஏங்க விட்டுட மாடீங்களே' என்று, ஆனால் குழந்தை கேட்காது ஏனென்றால் அதற்கு தெரியும் தனது தந்தை போகும் தன்னை விடமாட்டார் என்பது எனவே தான் அது சந்தோசமாக மேலேயும் கீழேயும் சென்று வருகிறது.
மாணவர்களே நீங்கள் யார் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது உங்களின் கேரக்டர்க்தான் முடிவு செய்யும். உங்களது உழைப்பையும் வெற்றியையும் தொடர்புப்படுத்துவது ஒழுக்கம், 2000 த்திலும் அதுதான் 3000 திலும் அதுதான். உலகம் அழியும் வரை அதுதான். டிசிப்ளின் இஸ் த கீ .
மகனோ மகளோ காலை 5 மணிக்கு எழுந்து எக்சர்சைஸ் பண்ண வேண்டும் என்று தந்தை ஆசைப்பட்டால் அவரும் அந்நேரம் எழுந்திருக்க வேண்டும். பிள்ளைகள் மொபைல் போன் நோண்ட கூடாது என்று தாய்மார்கள் விரும்பினால் அவர்கள் சீரியல் பார்க்கக்கூடாது. நீங்கேள சீரியல் பார்த்தால் பிள்ளைகள் போன் தன பார்க்கும். பிள்ளைகளுடன் பெற்றோர்கள் பேச வேண்டும். இல்லையென்றால் அவர்கள் போனில் வெளியில் தான் தொடர்பை தேடிக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும்.
அவர்களுக்குப் பேச யாரும் இல்லாத சூழ்நிலையை உருவாக்கக்கூடாது. அவர்களைத் தூரத்திலிருந்து பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். மாணவர்கள் ஆசியர்களுடன் உரையாட வேண்டும். இன்று அதற்கான சூழல் இல்லாமல் ஆகிவிட்டது. அதேபோல் பிள்ளையின் வளர்ப்பில் தந்தையின் பங்கும் இருக்க வேண்டும். வேலை பார்த்து காசு கொண்டு வருவது மட்டும் அவர்களின் வேலையாக இருக்கக்கூடாது.
பிள்ளைகள் குற்றவாளிகள் இல்லை அவர்கள் சமூகத்தின் நெருக்கடிக்குள் இருக்கிறார்கள், வீட்டுக்குள் உங்களை பார்த்துத்தான் அவர்கள் வளர்கிறார்கள், அவர்கள் உங்களின் பிள்ளைகள் மட்டுமல்ல . இந்த சமூகத்துக்குச் சொந்தமானவர்கள் எனவே அவர்களை வளர்ப்பதில் கவனம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- ஐபிஎல் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
- ஐபிஎல் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
ஐ.பி.எல் 2024 தொடருக்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையாளர்கள் குழுவில் 'நீயா நானா' கோபிநாத் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகியது.
இந்நிலையில், அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் 2024ஆம் ஆண்டு ஒளிபரப்பாகவுள்ள ஐ.பி..எல் போட்டியில் புதிய தொகுப்பாளராக இணைந்துள்ளார்.
வரும் மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பல்கலைக்கழக அளவில் நடந்த போட்டியில் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று வெற்றியையும் தேடித்தந்தார்.
- தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அசோசியேசன் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் குமரேசன்.விவசாய குடும்பத்தை சேர்ந்த இவரது மகன் கோபிநாத்(32). 7 வயதில் இவருக்கு ஏற்பட்ட விபத்தில் இடதுகை பலவீனமானது. இருந்தபோதும் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் பள்ளி நாள் முதல் தொடர்ந்து அதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார்.
பி.இ பட்டதாரியான கோபிநாத் சிவகங்கையில் படித்தபோது அனைத்து வீரர்களும் பங்கேற்கும் கிரிக்கெட்டில் வேகப்பந்து மற்றும் ஆல்ரவுண்டர்பிரிவில் பங்கேற்று அசத்தினார். மேலும் பல்கலைக்கழக அளவில் நடந்த போட்டியில் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று வெற்றியையும் தேடித்தந்தார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அசோசியேசன் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு தென்னிந்திய அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் பங்கேற்ற போட்டி ஆந்திராவில் நடைபெற்றது. இறுதி போட்டியில் புதுச்சேரி அணியுடன் மோதிய தமிழக அணி வெற்றிபெற்றது.
இதில் சிறந்த பந்துவீச்சாளராக கோபிநாத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் மும்பையில் நடந்த தேசிய அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 9 அணிகள் பங்கேற்றன. இறுதிச்சுற்றில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அணிகள் மோதின. அந்த போட்டியிலும் தமிழ்நாடு அணி வெற்றிபெற்றது. மேலும் கோபிநாத் அந்த தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி வீரர்களை திணறடித்து விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் சிறந்து விளங்குகிறார்.
இதனையடுத்து இவரது சாதனைகளை ஊக்குவிக்கும் விதமாக வருகிற 3-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற உள்ள இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் பிரீடம் டிராபி போட்டியில் இந்திய அணி சார்பில் கோபிநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கோபிநாத் தெரிவிக்கையில், கடுமையான பயிற்சியும், முயற்சியும் இருந்தால் எந்த இலக்கையும் எட்டலாம். உலக கோப்பையில் பங்கேற்று விளையாடுவதே எனது லட்சியமாக உள்ளது. எனது இந்த வளர்ச்சிக்கு எனது குடும்பத்தினர், அணியின் கேப்டன் மற்றும் சகவீரர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களுக்கு எனது நன்றி என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்