search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டால்பின் மீன்"

    • ஏர்வாடி அருகே வலையில் சிக்கிய டால்பின் மீனை மீனவர்கள் கடலில் விட்டனர்.
    • இந்த மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    கீழக்கரை

    மன்னார்வளைகுடா கடலில் ஓங்கி இன திமிங்கலங்கள், ஆவுலியா எனப்படும் கடல் பசு, டால்பின், பாறாமை, பாலாமை, பனை மீன், வேளா மீன், பால் சுறா, கடல் அட்டைகள், கடல் குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு வகை உயிரினங்கள் உள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே வாலிநோக்கம் கடலில் தற்போது சீலா மீன் பிடிக்கும் சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலையை கடலில் வீசி பின்னர் கரைக்கு இழுத்தனர். அப்போது சுமார் 4 மற்றும் 6 வயதுடைய டால்பின் மீன் வலையில் சிக்கி இருந்தது. வலைக்குள் சிக்கி போராடிக் கொண்டிருந்த டால்பினை கண்ட மீனவர்கள் அதனை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.

    இது குறித்து வனச்சரகர் செந்தில்குமார் கூறும்போது, அழிந்து வரும் அரிய வகை இனமான டால்பின் வாலி நோக்கம் மீனவர்கள் கரை வலையில் சிக்கியுள்ளது. மீனவர்கள் உடனே அதனை மீட்டு கடலில் விட்டுள்ளனர் என்றார். கடந்த 20-ந் தேதி சாயல்குடி அருகே நரிப்பையூர் மீனவர்கள் கரை வலையில் சிக்கிய 200 கிலோ எடையுள்ள டால்பினை கடலுக்குள் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×