என் மலர்
நீங்கள் தேடியது "சி.சி.டி.வி கேமிரா"
- சேலம் சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் இன்று காலை சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
- ஏற்காட்டில் கூடுதலான சி.சி.டி.வி கேமிராக்களை நிறுவ வேண்டும்.
சேலம்:
சேலம் சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் இன்று காலை சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி மற்றும் ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் அம்சவல்லி, மல்லூர் இன்ஸ்பெக்டர் கலையரசி, ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ மோகன் மற்றும் சப் -இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபினவ், கடந்த ஆண்டை விட சேலம் ரூரலுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் குற்ற வழக்குகள் குறைந்து உள்ளதை சுட்டிக்காட்டி அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும் ரூரலுக்கு உட்பட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போதை பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும், சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் கூடுதலான சி.சி.டி.வி கேமிராக்களை நிறுவ வேண்டும் என்றும்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும்,குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் சிறப்புடன் செயல்படுத்த அறிவுறுத்தினார்.