என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரேடியோ சேனல்கள்"
- ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும்.
- வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் அடுத்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.
பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் ரேடியோ சேவையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்க உள்ளது.
"ரேடியோ ஹரிவராசனம்" என்ற பெயரில் அந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது. இது 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்கள் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் கேட்கக்கூடிய வகையில் இந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது.
ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும். இதில் வழிபாடுகள், பக்தி பாடல்கள், கோவில் விழாக்களின் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் சபரிமலையின் வரலாறு பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும்.
மேலும், கோவில் மற்றும் அதன் பாரம்பரியங்கள் தொடர்பான நேர்காணல்கள் மற்றும் பேச்சுகளும் ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டிருக்கிறது.
- ரேடியோ சேனல்கள் வன்முறையை ஊக்குவிக்கும் பாடல்களை ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்தது.
- இதை மீறினால் அந்த ரேடியோ நிலையங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளது
புதுடெல்லி:
மது, போதைப் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் பாடல்களை ரேடியோ நிலையங்கள் ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ரேடியோ நிலையங்கள் கிராண்ட் ஆப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் கண்டிப்பாக செயல்படவேண்டும்.
இந்த ஒப்பந்தங்களின்படி வன்முறை இடம்பெறும் எந்தவொரு விஷயத்தையும் ரேடியோவில் ஒலிபரப்பக் கூடாது. இதை மீறினால் அந்த ரேடியோ நிலையங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளது.
சில ரேடியோ சேனல்கள் மது, போதைப் பொருள், ஆயுதங்கள், கும்பல் மற்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தும் பாடல்களை ஒலிபரப்பு செய்வதை தொலைத்தொடர்பு அமைச்சகம் கண்டறிந்ததை அடுத்து இந்த அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்