என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க.சாதனை"

    • கிராமங்கள்தோறும் தி.மு.க.வின் சாதனைகளை பரப்ப வேண்டும் மாநில மாணவரணி தலைவர் பேசினார்.
    • இவர் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தை சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆவார்.

    பனைக்குளம்

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தை சேர்ந்தவர் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராஜீவ்காந்தி. இவரை தி.மு.க. மாணவர் அணி தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்திற்கு வந்த அவரை பரமக்குடி, மஞ்சூர், சத்திரக்குடி, அச்சுந்தன் வயல், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து சித்தார் கோட்டை சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தேர் போகி கிராமத்திற்கு வந்த இவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் பொதுபட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலில் சேர்க்கக்கோரி இல்லம் தேடி கல்வித் திட்டம் போல பள்ளி, கல்லூரிகள்தோறும் திண்ணை பிரசாரத்தில் தி.மு.க. மாணவர் அணி ஈடுபடும். தி.மு.க.வின் சாதனைகளை கிராமங்கள்தோறும் பரப்பு வோம். முதல்-அமைச்சரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை பள்ளி, கல்லூரி மாணவர் இயக்கத்தை தயார்படுத்தி திராவிட இயக்கத்தின் சாதனைகளை கொண்டு செல்லுவோம். திராவிடம் இருந்ததால் என்னை போன்றவர்கள் சட்டக்கல்லூரி படித்து வக்கீலாக வர முடிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் காயாம்பு, மண்டபம் ஒன்றிய மத்திய செயலாளர் முத்துக்குமார், தேர்போகி ஊராட்சி மன்ற தலைவர் மோகன்குமார். மானாங்குடி பத்மநாதன், பெரியபட்டினம் மீரான், சேக். நாகூர்கனி, ஹரி கிருஷ்ணன், கணேசன், சம்பத்குமார், ராஜேஷ், முனியசாமி, விஜயராகவன், பாண்டி, விஜயராஜ், காளிமுத்து திருமுருகன், சக்திவேல், யாசர், அன்பரசன், பிரபா, சாலமன், கனி, முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

    ×