search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார குறைபாடு"

    • ஏர்வாடி ஓட்டல்களில் தொடர்ந்து சுகாதார குறைபாடு ஏற்பட்டு வருகிறது.
    • நடவடிக்கை எடுக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலுக்காக வருகின்றனர்.

    அதிக மக்கள் வந்து செல்வதால் மற்ற கடைகளை விட சிறிய ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் அதிக ளவில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பிரி யாணி, சாப்பாடு, இட்லி, தோசை, புரோட்டா, என காலை, மாலை, இரவு நேரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    குறிப்பிட்ட ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாக உள்ளது. சில ஓட்டல்களில் சுத்தம் செய்யப்படாத மேஜை, கழுவப்படாத கிளாஸ், தூசுகளுடன் குடிநீர் தொட்டி, வாழை இலை இல்லாமல் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு வழங்கப்படுகிறது.

    ஏர்வாடி ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் ஏற்கனவே பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்திய எண்ணை களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர். சுகாதாரம் மிக மோசமாக உள்ளதை சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

    இதுபோன்ற பாதுகாப்பு இல்லாத உணவுகளினால் ஏற்படும் உடல்நல பாதிப்பு களை உணர்ந்தாலும் வேறு வழியில்லாமல் வெளிமாவட்ட பக்தர்கள் இந்த ஒட்டல்களில் உணவு சாப்பிடுகின்றனர்.

    ஏர்வாடியில் செயல் படும் ஓட்டல்களில் சுகாதார குறைபாடு உள்ளதை அதிகாரிகள் கவனிக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    இங்குள்ள சுகாதாரமற்ற ஒட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×