search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபாட்டு தலம்"

    • ஆடி தபசு, ஆடி பெருக்கை முன்னிட்டு வழிபாட்டு தலங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டுகின்றன.
    • தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 50 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக மதுரை மேலாண் இயக்குநர் ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வார இறுதி விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதை முன்னிட்டு திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாகவும், அதே போல் மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல். தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 50 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    மேலும் ஆடி பவுர்ணமி, ஆடிதபசு, ஆடி 18-ம் பெருக்கு திருவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம், மதுரை கோட்டம் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் 150 சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம், திருப்பரங்குன்றம் பவுர்ணமி கிரிவலம், சதுரகிரி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சங்கரன்கோவில், மடப்புரம், அழகர் கோவில், ஆடி 18-ம் பெருக்கு திருவிழா, குச்சனூர் சனி பகவான் கோவில், சுருளி தீர்த்தம், சடையாண்டி கோவில், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில், பழனி ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் வழிபாடுகள் நடக்கும்போது ஒருசில அமைப்பினா் இடையூறு செய்கின்றனா்.
    • திருச்சபை போதகா்கள் மற்றும் ஐக்கியங்களின் தலைவா்கள் கூட்டம் விஜயாபுரத்தில் உள்ள திருச்சபையில் நடைபெற்றது.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்ட திருச்சபை பாதுகாப்பு கூட்டமைப்பின் சாா்பில் அனைத்து திருச்சபை போதகா்கள் மற்றும் ஐக்கியங்களின் தலைவா்கள் கூட்டம் விஜயாபுரத்தில் உள்ள திருச்சபையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருப்பூரில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் வழிபாடுகள் நடக்கும்போது ஒருசில அமைப்பினா் இடையூறு செய்கின்றனா். இது கண்டிக்கத்தக்கதாகும். இதே போன்ற சம்பவங்கள் தொடா்ந்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருச்சபை போதகா்களும், கிறிஸ்தவ மக்களும் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×