search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகிழ்"

    • குமரியில் மழை நீடிப்பு
    • குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை

    நாகர்கோவில்:

    வங்கக் கடலில் இலங்கை அருகே நிலை கொண்டி ருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து உள்ளது. இருப்பினும் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இந்த நிலையில் மாவட் டம் முழுவதும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. கன்னியாகுமரி யில் இன்று அதிகாலையில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, அஞ்சுகிராமம், மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகா லையில் கன மழை பெய்தது.

    இதைத் தொடர்ந்து வானத்தில் கருமேகங்கள் திரண்டு மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப் போது மழை பெய்தது. நாகர்கோவிலிலும் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. புத்தன் அணை, ஆணைக்கிடங்கு, கன்னிமார், நிலப்பாறை பகுதிகளிலும் மழை பெய் தது. நிலப்பாறையில் அதிக பட்சமாக 8.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மலையோரப் பகுதி யான பாலமோர் பகுதி யிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழை யின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. தற்பொழுது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு வரு கிறார்கள்.

    அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அங்கு அலை மோதி வருகிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.38 அடியாக இருந்தது. அணைக்கு 803 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 785 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.98 அடியாக உள்ளது. அணைக்கு 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி-1.6, பாலமோர்-2.4, மயிலாடி- 6.4, கொட்டாரம்-5.2, நிலப்பாறை-8.4, கன்னி மார்-1.8, பூதப்பாண்டி-1, நாகர்கோவில்-7, ஆணைக்கிடங்கு-3.2, புத்தன் அணை-1.2.

    • கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்
    • செயற்கை நீரூற்றுகளை சீரமைக்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக வேப்பமூடு பூங்கா திகழ்ந்து வருகிறது.

    இந்த பூங்காவில் காலை மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கி ழமைகளில் கூட்டம் அலை மோதி வரு கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இந்த பூங்காவிற்கு வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவை மேம்படுத்த மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண் டார்.

    இதையடுத்து பூங்கா வில் இருந்த விளை யாட்டு உபகரணங்கள் மேம்படுத்தப்பட்டது.பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொள்ள வசதி யாக செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் சிறுவர்களுக்கான ராட்டினங்களும் அமைக்கப் பட்டு உள்ளது.

    இந்த ராட்டினங்களில் ஏற கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதி வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக இந்த ராட்டி னங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக கட்டணங்களும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    இதே போல் மேலும் சில விளையாட்டு உபகர ணங்களை பூங்காவில் அமைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் பாழடைந்து மோசமாக காணப்படுகிறது. அதனை செயற்கை நீரூற்றுகளை சீரமைக்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

    ×