என் மலர்
நீங்கள் தேடியது "திருஏடு வாசிப்பு"
- திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (2-ந்தேதி) தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.
- கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம்.
கன்னியாகுமரி:
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (2-ந்தேதி) தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு ஆகியவை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை, 5 மணிக்கு ஏடு வாசிப்பு தொடங்க ப்பட்டு,சாமிதோப்பு தலைமைப்பதி தலைமைகுரு பால ஜனாதிபதி விளக்கவுரையாற்றுகிறார்.இரவு 8 மணிக்கு வாகன பவனி நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பும், மாலை ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.
விழாவின் 15-ம் நாளான வருகிற 16-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு, மாலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, திருக்கல்யாண திருஏடு வாசிப்பு முடிவில் இனிமம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 18-ந் தேதி ஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.