search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியிருப்பு;"

    • முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.
    • கட்சியினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்


    ஊட்டி :

    நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் மன்றம் பொறுப்பு ஏற்றும் நிரந்தர செயல்அலுவலர் இல்லை என மன்ற அங்கத்தினர்கள் மற்றும் கட்சியினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்

    அதன் அடிப்படையில் மாவட்டத்தில் ஏற்கனவே பல பேரூராட்சிகளில் செயல் அலுவலராக பணிபுரிந்த முகம்மது இப்றாகிம் என்பவரை தேனி மாவட்டத்தில் இருந்து மாறுதல் செய்து நியமனம் செய்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்ற செயல்அலுவலர் முகம்மது இப்றாகிம் கடந்த 2 நாட்களாக பேரூராட்சியில் நடைபெற்றுவரும் திட்டபணிகளிளை பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் உடன் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து செயல்அலுவலர் முகம்மது இப்றாகிம் மன்ற கூட்டத்தினை நடத்த ஏற்பாடு செய்தார். பேரூராட்சி தலைவர் வள்ளி தலைமையில் கூட்டம் நடத்தி அனைத்து மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு பல தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

    பேரூராட்சியில் சொத்துவரி குளறுபடியால் பலருக்கும் அதிகமாக வரிவிதிப்பு செய்யபட்டுள்ளது என கூறி கடந்த வாரம் நடைபெற்ற மன்ற கூட்டத்தினை பலர் வெளிநடப்பு செய்து மன்ற கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

    மேலும், டான்டீ ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிரந்தர குடியிருப்பு வழங்க உத்திரவாதம் வழங்கிய முதல்-அமைச்சருக்கு பேரூராட்சி மன்றம் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.

    ×