என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிப்படை சட்டம்"

    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
    • மாணவர்களுக்கான அடிப்படை சட்ட உரிமைகள் மற்றும் பொதுமக்களுக்கான சட்ட பாதுகாப்புகளை எடுத்து கூறினர்.

    திருவையாறு:

    திருவையாறு சீனிவாசராவ் பள்ளியில் அரசியல் அமைப்பு தினவிழா பள்ளி தலைமையாசிரியர் அனந்தராமன் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் உதவி தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றார்.

    விழாவிற்கு தஞ்சாவூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.தொடர்ந்து, மாணவர்களுக்கான அடிப்படை சட்ட உரிமைகள் மற்றும் பொதுமக்களுக்கான சட்ட பாதுகாப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

    மேலும், அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு சம்மந்தமாக பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் வினாடி- வினா போட்டிகள் நடைபெற்றது.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    போட்டிகளில் திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆச்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, வானராங்குடி மற்றும் முகமது பந்தர் ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    திருவையாறு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியும், வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அரசியலமைப்பு சட்டப்படி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்தும், வட்ட சட்ட பணிகள் குழு மூலம் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.விழாவில் பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் அருணா, சாந்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், சுற்று வட்டார பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

    ×