search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான ஊழல் வழக்கு"

    • அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
    • வியாபாரிகளிடம் இருந்து வந்த பணத்தை ஆம் ஆத்மி கட்சியினர் பங்கு போட்டு கொண்டனர்

    ஐதராபாத்:

    டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் கடந்த 15-ந்தேதி தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை வருகிற 23-ந்தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இந்நிலையில் அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    மொத்த வியாபாரிகளிடம் இருந்து வந்த பணத்தை ஆம் ஆத்மி கட்சியினர் பங்கு போட்டு கொண்டனர். ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா ரூ.100 கோடி வழங்கி உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டனர்.
    • கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் ஆம் ஆத்மி ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகினர்.

    இதற்கிடையே, தெலுங்கானா முதல் மந்திரியும் பாரத ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான கே.சந்திரசேகரராவ் மகள் கவிதா மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை அதிகாரிகளும் கவிதாவிடம் 3 முறை விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரியின் மகளும், பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.சி.யுமான கவிதாவை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளனர் என தகவல் வெளியானது.

    இதையடுத்து, அவரது வீட்டின் முன் பி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அக்கட்சி எம்.எல்.ஏ. ஹரீஷ் ராவ் அங்கு வந்து தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கவிதா வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி இருந்தனர்.
    • கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் ஆம் ஆத்மி ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி இருந்தனர்.

    தெலுங்கானா முதல் மந்திரியும் பாரத் ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவருமான கே.சந்திரசேகரராவ் மகள் கவிதா மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள்.

    இதே போல அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 11-ந் தேதி அவரிடம் சுமார் 9 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். கடந்த 16-ந் தேதி மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

    ஆனால் இந்த வழக்கில் கைது செய்ய தடை விதிக்க கோரியும் சம்மனை தடை செய்யக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிலுவையில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கவிதா கோரிக்கை வைத்திருந்தார். இதை அமலாக்கத்துறை நிராகரித்து நேற்று (20-ந் தேதி) ஆஜராக உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து நேற்று 2-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜரானார். அவரிடம் சுமார் 11 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கவிதாவின் பினாமி என்று கருதப்படும் ஏற்கனவே கைதான அருண் ராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்டதாக தெரிகிறது.

    நேற்றைய விசாரணைக்கு பிறகு கவிதா இன்றும் ஆஜராக வேண்டும் என்று அமலாக் கத்துறை உத்தரவிட்டு இருந்தது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக புறப்பட்டார்.

    கவிதா காலை 11.30 மணியளவில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் 3-வது முறையாக விசாரணை நடத்தினார்கள். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • ஆம்ஆத்மி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால் தடுத்து நிறுத்தும் வகையில் அதிரடி படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
    • விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன் கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    கடந்த 2021-22-ம் ஆண்டு ஆம்ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம்ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    மதுபான வியாபாரிகளில் சிலருக்கு மட்டும் உரிமம் வழங்குவதற்காக ஆம்ஆத்மி தலைவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகவும் அந்த பணத்தை ஆம்ஆத்மி தலைவர்கள் கோவா சட்டசபை தேர்தலில் செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படை யில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகரராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 23-ந்தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர். மதுபானக் கொள்கையை வெளியிட்ட கலால் துறை மந்திரி என்பதால் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியமாக கருதப்பட்டது.

    ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது.

    மணீஷ் சிசோடியாவை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று ஆஜராக போவதாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா அறிவித்தார். இந்த நிலையில் இன்று காலை முதல்-மந்திரி கெஜ்ரிவால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'சி.பி.ஐ. விசாரணையின் போது சிசோடியாவை கைது செய்ய உள்ளனர்' என்று தெரிவித்து இருந்தார்.

    இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் முக்கிய இடங்கள் மற்றும் சி.பி.ஐ. அலுவகம் முன்பு 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆம்ஆத்மி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால் தடுத்து நிறுத்தும் வகையில் அதிரடி படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராவதற்காக 10 மணிக்கு தனது வீட்டில் இருந்து மணீஷ் சிசோடியா புறப்பட்டார். அப்போது அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன் கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது. நாங்கள் பகத்சிங் வழி வந்தவர்கள். எனவே சிறைக்கு செல்வதெல்லாம் சாதாரண விஷயம்' என்று கூறி இருந்தார்.

    அவர் வீட்டில் இருந்து திறந்த காரில் சென்றார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காரை சுற்றி நடந்து வந்தனர். 'சிசோடியா சிந்தா பாத்' என்று அவர்கள் முழக்கமிட்டபடி சென்றனர்.

    ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு அவர் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அமலாக்கத்துறை இயக்குனரகம் ரூ.76.54 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக முடக்கி உள்ளது.
    • டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தொழில் அதிபர் தினேஷ் அரோராவின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிற டெல்லியில் மதுபான கொள்கையில் மாபெரும் ஊழல் அரங்கேறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடைகள் உரிமம் வழங்கி சலுகைகளை தாராளமாக அளித்து, லஞ்சம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

    இதில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த ஊழலில் மணிஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதுடன், அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டது.

    இந்த ஊழலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதா பெயரும் அடிபடுகிறது. குறிப்பாக சரத் ரெட்டி, கே கவிதா, மகுந்தா சீனிவாசுலு ரெட்டி ஆகியோரால் நடத்தப்படுகிற சவுத் குரூப்பிடம் இருந்து, அமித் அரோரா உள்பட பல்வேறு நபர்களால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு விஜய் நாயர் என்பவர் மூலம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு இருக்கிறது.

    இந்த விவகாரத்தில் கவிதாவிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    இந்த நிலையில் மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமாக டெல்லி, மும்பையில் உள்ள விடுதிகள், வாகனங்கள். வங்கி டெபாசிட்டுகள் என ரூ.76 கோடியே 54 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டது.

    இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-

    * அமலாக்கத்துறை இயக்குனரகம் ரூ.76.54 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக முடக்கி உள்ளது.

    * முடக்கப்பட்ட சொத்துகள், ஆத் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் விஜய் நாயர், ஐதராபாத் மது தொழில் அதிபரும், ராபின் மதுபான நிறுனத்தின் பங்குதாரருமான அருண் பிள்ளைக்கு சொந்தமானவை ஆகும்.

    இந்த அருண்பிள்ளை, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதா, மதுபான தொழில் அதிபர் சமீர் மஹந்த்ரு, அவரது மனைவி கீதிகா மஹந்த்ரு மற்றும் அவர்களது நிறுவனமான இண்டோஸ்பிரிட் குழுமம் ஆகியவற்றினை குறிக்கிற சவுத் குரூப்பின் பிரதிநிதி ஆவார்.

    * டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தொழில் அதிபர் தினேஷ் அரோராவின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இவர் அப்ரூவர் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. புட்டி ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்ற மதுபான நிறுவனத்தின் இயக்குனர் அமித் அரோராவின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

    • டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • வழக்கில் தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்துவதில் ஊழல் நடைபெற்றதாகவும், இந்த ஊழல் பணம் பல்வேறு அரசியல் தலைவர்கள் இடையே கைமாறியதாகவும் புகார் எழுந்தது.

    இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த 30-ந் தேதி அவரை கைது செய்தனர். மேலும் அவரது வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி ரூ.2.82 கோடி ரொக்கப்பணம் மற்றும் 1.80 கிலோ தங்கம் ஆகியவற்றை கைப்பற்றினர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். மதுபான ஊழல் தொடர்பாக டெல்லியில் தொழிலதிபர் அமித்அரோரா சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

    அவர் அளித்த வாக்குமூலத்தில் சவுத் குரூப் என்ற நிறுவனம் மூலம் ஆம்ஆத்மி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் தரப்பட்டதாக கூறியுள்ளார்.இந்த சவுத்குரூப் நிறுவனத்தை சரத்ரெட்டி, கவிதா, மகுந்தாரெட்டி ஆகியோர் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கவிதா தற்போது டி.ஆர்.எஸ்.கட்சியின் எம்.எல்.சி.யாவும் உள்ளார்.

    இந்நிலையில் மதுபான ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த கவிதாவுக்கு வருகிற 6-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. துணைகண்காணிப்பாளர் அலோக் குமார் ஷாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஜூலை 27-ந் தேதி உள்துறை இயக்குனர் பிரவின்குமார் ராயிடம் இருந்து எழுத்து பூர்வமாக ஒரு புகார் வந்தது. அதன் அடிப்படையில் டெல்லி அரசின் கலால் கொள்கை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ்சி சோடியா மற்றும் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    வழக்கு விசாரணையின் போது சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பான மேல் விசாரணைக்காக வருகிற 6-ந் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கவிதா தரப்பிலும், ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 160-வது பிரிவின் கீழ் என்னிடம் விளக்கம் கேட்டு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன்படி வருகிற 6-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள எனது இல்லத்தில் அவர்களை சந்திக்கலாம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் என கூறப்பட்டுள்ளது.

    மேலும் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அமலாக்கத்துறை என எந்த அமைப்புகள் கேள்விகள் கேட்டாலும் அதற்கு பதில் சொல்ல தயாராக உள்ளேன் என கவிதா கூறியுள்ளார்.

    ×