என் மலர்
நீங்கள் தேடியது "5 இடங்களில்"
- குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
- பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகள் இடிந்து விழும் அபாயமும் உள்ளது.
குன்னூர்,
நீலகிரி மாவடத்தில் கடந்த சில வாரங்களாக கடும் உறைபனி மற்றும் பனிப்பொழிவு காணப்ப டுகிறது. அவ்வப்போது சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பலத்த மழையும் பெய்து வருகிறது. நேற்று காலை கடும் வெயில் நிலவியது. அதனை தொடர்ந்து கடும் பனி கொட்டி தீர்த்தது.
மாலையில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு ஆரம்பித்த மழை அதிகாலை வரை நீடித்தது. இந்த மழையால் சாலையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இரவு நேரம் என்பதால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர் மழைக்கு ஒட்டுப்பட்டறை, உழவர்சந்தை, ரேலி காம்பவுண்ட், வண்ணா ரபேட்டை உள்பட 5 இடங்களில் மண்சரிவு ஏற்ப ட்டது. தகவல் அறிந்ததும், அதிகாரிகள் விரைந்து வந்து மண்சரிவை அகற்றினர். தொடர்ந்து இதேபோன்று மழை பெய்தால் மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகள் இடிந்து விழும் அபாயமும் உள்ளது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிந்தது.