என் மலர்
நீங்கள் தேடியது "மதுரை-விழுப்புரம்"
- மதுரை-விழுப்புரம் ரெயில் நாளை வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுளளது.
- மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில் டிசம்பர் மாதத்தில் 10 நாட்கள் திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும், மதுரை-கச்சக்குடா வாராந்திர ரெயில் வருகிற 7-ந் தேதி மதுரையில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்ருடிந்தது. வாடிப்பட்டியில் தற்போது பராமரிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
எனவே மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில் நாளை (5-ந் தேதி) முதல் வருகிற 9-ம் தேதி வரை வழக்கம்போல் மதுரையில் இருந்து இயக்கப்படும். அதேபோல மதுரை-கச்சக்குடா விரைவு ரெயில் வருகிற 7-ந் தேதி மதுரையில் இருந்து வழக்கம் போல காலை 5.30 மணிக்கு புறப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.