என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகா தீபத் திருவிழா"
- அருணாசலேசுவரர் கோவிலில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை மகா தீபத் திருவிழா நடைபெறவுள்ளது.
- கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழித்தடத்தில் 200 பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
விழுப்புரம்:
போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது:- திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை மகா தீபத் திருவிழாவும், 7-ந் தேதி (புதன்கிழமை) பவுர்ணமி கிரிவலமும் நடைபெறவுள்ளது. இதனால், பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். அவர்களின் பஸ் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வருகிற 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கூடுதல் பஸ்கள் விழுப்புரம் மண்டலம் சார்பில் இயக்கப்பட உள்ளன.
விழுப்புரம், திரு வண்ணாமலை வழித் தடத்தில் 317 பஸ்கள், திண்டிவனம், திருவண்ணாமலை வழித்தடத்தில் 82 பஸ்கள், புதுச்சேரி, திருவண்ணாமலை வழித்தடத்தில் 180 பஸ்கள், திருக்கோவிலூர், திருவண்ணாமலை வழித்தடத்தில் 115 பஸ்கள், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழித்தடத்தில் 200 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை ஏற்பாடு செய்திடவும், பஸ் இயக்கங்களை மேற்பார்வை செய்யவும் அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.