என் மலர்
நீங்கள் தேடியது "ரவுண்டானாவில் வைக்கப்படும் ேபனர்கள்"
- வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கி ெசல்கின்றனர்.
- கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் பேனர் கலாசாரம் பெருகி வருகிறது.
வடவள்ளி
கோவை மருதமலை சாலையில் வடவள்ளி ரவுண்டானா பகுதி உள்ளது. இந்த பகுதி மருதமலை, தொண்டாமுத்தூர், இடையர்பா–ளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய சந்திப்பாக உள்ளது.
போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தால் இங்கு ரவுண்டானா அமைக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் நின்று செல்லும் வகையில், சிக்னல்களும் பொருத்தப்பட்டன.கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் பேனர் கலாசாரம் பெருகி வருகிறது.
அந்த பேனர்களையும் சிக்னல்களை மறைத்தபடி வைக்கின்றனர். இதனால் எப்போது எந்த சிக்னல் விழுகிறது என்பதே தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடையும் நிலை உள்ளது.மேலும் அந்த பேனர்கள் ரவுண்டாவில் இருக்கும் மின்னொளி கம்பத்தில் சாய்ந்தபடி இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அந்த பேனர்கள் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயமும் காணப்படுகிறது.எனவே இவ்வாறான பேனர்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை எடுத்துள்ளனர்.