என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிற்றார்"
- ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- பேச்சிபாறையில் 65 மி.மீ மழை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடல் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவில், மயிலாடி, தக்கலை, குளச்சல், இரணியல், ஆரல்வாய்மொழி, ஆணைக் கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பேச்சுப் பாறை, பெருஞ் சாணி, சிற்றார் அணை பகுதியிலும் மழை பெய்தது. பேச்சிபாறையில் அதிகபட்சமாக 65 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. மழையோர பகுதி யான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிபாறை அணைக்கு வரக்கூடிய நீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து பொதுபணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி யுள்ளதை யடுத்து குழித்துறை யாறு, கோதையாறு, வள்ளியாறு, பரளிஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெருஞ் சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் மூடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 45.44 அடியாக இருந்தது. அணைக்கு 1468 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 6.86 கன அடி தண்ணீர் வெளியேற்றபடுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 72. 10 அடியாக உள்ளது. அணைக்கு 643 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றார் 1-அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், சிற்றார் 2 நீர்மட்டம் 13.22 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 18 அடியாகவும், மாம்பழத் துறையார் அணையின் நீர்மட்டம் 49.13 அடியாகவும் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 20 அடியை நெருங்குகிறது.
மாவட்ட முழுவதும் பெய்து மழை அளவு மில்லி மீட்டரில் வரு மாறு:- பேச்சுப்பாறை 65, பெருஞ்சாணி 44.8, சிற்றார்1-40.6, சிற்றார் 2 -50.2, பூதப்பாண்டி 25.6, களியல் 48, கன்னிமார் 13.6, கொட்டாரம் 28.2, குழித்துறை 43, மைலாடி 20.2, நாகர்கோவில் 24.4, சுருளோடு 49, தக்கலை 20, குளச்சல் 3, இரணியல் 3, பாலமோர் 25.4, மாம்பழத்துறையாறு 26.4, திற்பரப்பு 54, ஆரல்வாய்மொழி 17.2, கோழிப் போர்வை 20.4, அடையாமடை 18.2, குருந்தன்கோடு 22, முள்ளங்கினாவிளை 42.6, ஆணை கிடங்கு 24.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்