என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர்"

    • 1758-ஆம் ஆண்டு டிசம்பா் 4-ந் தேதி மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டா் உருவாக்கப்பட்டது.
    • ராணுவ வீரா்களின் உயிா் தியாகத்தை போற்றும் வகையில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ஊட்டி

    சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டையில் 1758-ஆம் ஆண்டு டிசம்பா் 4-ந் தேதி மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டா் உருவாக்கப்பட்டது. பின்னா் மதுக்கரையில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் மையம் உருவாக்கப்பட்டு, 1947 ஆம் ஆண்டு குன்னூா் வெலிங்டனில் உள்ள ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ்க்கு மாற்றப்பட்டது. இரண்டரை நூற்றாண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற வரலாற்றை கொண்டுள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் 264-வது உதய தினம் நீலகிரியில் கொண்டாடப்பட்டது.

    இதில், பல்வேறு போா்களில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களின் உயிா் தியாகத்தை போற்றும் வகையில் போா் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ், ராணுவ மூத்த அதிகாரிகள் மற்றும் படைவீரா்கள் இதில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா்.ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸில் சைனிக் சம்மேளனம், முன்னாள் படைவீரா்கள், தற்போது பணியில் இருக்கும் படை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா்.

    ×