search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி"

    • நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும்.
    • கடலோர பகுதிகளில் மழை அளவு மிக அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவானது.

    இது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் மேற்கு-வடமேற்கு திசையில் மெல்ல நகா்ந்து வருகிறது.

    நாளை (புதன்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும். அந்த நிலையில் புயல் சின்னம் மேலும் வலுவாகி தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வரும்.

    இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கன மழை இன்று இரவு முதல் பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று 2 நாட்கள் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நீடிக்க இருப்பதால் மழை அளவு மிக அதிகமாக இருக்கும்.

    நாளை (புதன்கிழமை) வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று அதிக மழையை கொண்டு வரும். இதன் காரணமாக வட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டால் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே சென்னையில் நாளை பல பகுதிகளில் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, தமிழக பகுதிகளிலும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலி லும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன.

    அதேபோல் அரபிக் கட லில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஓமன் கடற் கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. அது ஓமன் கடற்கரையை அடைந்ததும் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், இந்திய பகுதி களில் இருந்து தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இத்தகைய வானிலை அமைப்புகளாலும், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசுவதாலும், நாளை அல்லது மறுநாள் தென்னிந்திய பகுதி களில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

    இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்.

    மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மின்பிடிக்க செல்வதை தவிா்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இனிவரும் நாட்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும். வழக்கமாக மழை காலங்களில் பெய்வது போலத்தான் நிகழாண்டும் மழை பெய்யும்.

    ஆகையால் இதை நினைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அவரவா் பகுதிகளுக்கு ஏற்ப முன்னேற்பாட்டு பணிகளைத் திட்ட மிட்டுக்கொள்ளுங்கள்.

    சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளதால், சென்னை முழுவதும் 200 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்பது அா்த்தம் கிடையாது.

    சென்னையில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும், சில பகுதிகளில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்று (செவ்வாய்க் கிழமை) திருவாரூா், நாகப் பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், திருவள்ளூா், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை (புதன்கிழமை) ராணிப்பேட்டை, திருவண் ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்க ளிலும், நாளை மறுநாள் (17-ந்தேதி) திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் நாளை (புதன்கிழமை) திருவள்ளூா், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயி லாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை (204 மில்லி மீட்டருக்கும் அதிகம்) பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கையும், நாளை சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டு இருப்பதால் இந்த 4 மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும். இதை கருத்தில் கொண்டு 4 மாவட்டங்களிலும் மீட்பு படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு பாதிப்புக்கு ஏற்ப உடனுக்குடன் உதவிகள் செய்ய அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். 4 மாவட்டங்களிலும் 1,200 இடங்களில் நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

    4 மாவட்டங்களிலும் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களை வெளியேற்ற பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர். குடியிருப்புகளை வெள்ளம் சூழம்பட்சத்தில் மக்களை வெளியேற்ற படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் தெருக்களில் தேங்கும் மழை தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற 900 இடங்களில் மோட்டார் பம்ப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மரங்களை வெட்டி அகற்றும் கருவிகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் ஆங்காங்கே வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட டிராக்டர்களும், பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

    சென்னையில் நாளை அதிக கன மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி வெள்ளம் தேங்கும்பட்சத் தில் உணவு வழங்கவும் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 300 இடங்களில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    உணவு வழங்கவும், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்யவும் சென்னை மாநகராட்சியில் 16 ஆயிரம் தன்னார்வல தொண்டர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த 16 ஆயிரம் தன்னார்வல தொண்டர்களும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படுவார்கள் என்று குறிப்பிடத்தக்கது.

    • புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைப்பு.
    • 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைகிறது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தகவலகள் தெரிவித்துள்ளன. இதையொட்டி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


    வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். இது வலுப்பெற்று டிசம்பர் 8ம் தேதி புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. இதனால் 8 மற்றும் 9 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    ×