என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்"

    • இன்று அதிகாலை வரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    • நிலுவைதொகை 2 தவணைகளில் வழங்கப்படுகிறது

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, அமைச்சர்கள் முன்னிலை யில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது ரூ.40 தினக்கூலி வழங்குவது, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதனை செயல்படுத்த அரசு ரப்பர் கழகம் முன்வரவில்லை. இதனால் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். குமரி மாவட்ட த்தைப் பொறுத்த வரை, கீரிப்பாறை,மணலோடை, பரளியாறு, காளிகேசம், சிற்றாறு, மருதம்பாறை, குற்றியார், கோதையார் பகுதிகளில் அரசுக்கு 3 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன.

    இங்குள்ள 9 கோட்ட ங்களில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரத்து 500 தொழிலாளர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 7-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். சுமார் 30 நாட்கள் இரவு பகலாக போராட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    நாகர்கோவில் வடசேரி யில் உள்ள அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் தின்கர்குமார், சேர்மன் கவுசல், பொது மேலாளர் குருசாமி ஆகியோர் முன்னி லையில் இந்த பேச்சு வார்த்தை நடந்தது. தொழிற் சங்க நிர்வாகிகள் பால்ராஜ் (ஐ.என்.டி.யூ.சி), வல்சகுமார் (சி.ஐ.டி.யூ), சுகுமாரன் (தொ.மு.ச), மகேந்திரன் (அ.தி.மு.க.), இளங்கோவன் (ரப்பர் தோட்ட தொழிலாளர் பேரவை) ஆகியோர் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தையில் ரூ.40 தினக்கூலி வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.

    மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடத்து வது எனவும் முடிவு செய்ய ப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தை தொழிலாளர் நல அதிகாரி முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகி கள் தரப்பில் வலியுறுத்த ப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஊதிய நிலுவைத் தொகையை எப்போது இருந்து வழங்கு வது என்பது குறித்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் இருந்து அதனை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. ஒருவழியாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது. வருகிற 15 மற்றும் 22-ந் தேதி என 2 தவணைகளில் ஊதிய நிலுவை தொகையை வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

    ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை போன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புவதென முடிவு செய்தனர். அதன்படி நாளை (7-ந் தேதி) அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்ப உள்ளனர்.

    ×