என் மலர்
நீங்கள் தேடியது "வள்ளங்கள்"
- பலத்த காற்று எதிரொலி
- குளச்சலில் இன்று மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
மன்னார் வளைகுடா, பாண்டிச்சேரி மற்றும் தமிழக கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ.வேகம் வரை காற்று வீசக்கூடும், 8-ந் தேதி குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் 70 கி.மீ. வரை அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதனை தொடர்ந்து மீனவர்கள் குறிப்பிட்ட நாட்களில் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் இன்று மீண்டும் கடலுக்கு செல்ல வில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்ப ட்டு உள்ளன.
இன்று கரை திரும்பிய விசைப்படகுகளில் சிறிய இறால் எனப்படும் புல்லன் மற்றும் கிளி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர்.
காற்று எச்சரிக்கை காரண மாக பைபர் வள்ளங்கள், கட்டு மரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.இவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில வள்ளங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.இதனால் குளச்சலில் இன்று மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.
- வானிலை எச்சரிக்கை காரணமாக கடலுக்குச் செல்லவில்லை
- குளச்சலில் கடந்த 3 நாட்களாக மீன்பிடி த்தொழில் பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
குளச்சல் கடல் பகுதியில் இருந்து சுமார் 300 விசை படகுகள், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசை ப்படகுகள் ஆழ் கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் மன்னார் வளைகுடா, பாண்டிச்சேரி மற்றும் தமிழக கடல் பகுதி யில் 40 கி.மீ.முதல் 50 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், இது அதிகரித்து 60 கி.மீ.வரை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் 70 கி.மீ. அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து குமரி மாவட்டத்தில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் இன்று மீண்டும் கடலுக்குச் செல்ல வில்லை.
அவை குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.மேற்கு கடற்கரை பகுதியில் காற்று எச்சரிக்கை விடுக்கப்படா ததால் சில படகுகள் குமரி மேற்கு கடற்கரை பகுதிக்கு சென்று தொழில் செய்து வருகின்றன.
இது தவிர காற்று எச்சரிக்கை காரணமாக பைபர் வள்ளங்கள், கட்டு மரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இவை மணற்பரப்பில் பாது காப்பாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில வள்ளங்கள் மீன் பிடிக்க சென்றன.அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.
இதனால் குளச்சலில் கடந்த 3 நாட்களாக மீன்பிடி த்தொழில் பாதிக்கப்பட்டது.
- வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
- அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி :
குளச்சல் சுற்று வட்டார கடல் பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் காற்று வீசுவதோடு கடல் சீற்றமாகவும் காணப்படும்.
தற்போது மே மாதமே கடல் சீற்றமாக காணப்படு கிறது. கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாகவும் கடல் சீற்றமாக இருந்தது. மேலும் அலைகளின் உக்கிரமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் இன்றும் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கட்டுமரங்களும் குறைந்த அளவே கடலுக்கு சென்றன.
குளச்சல் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகில் மணல் மேடுகளாக காணப்படும். தற்போது கடல் சீற்றமாக காணப்படு வதால் மேடான பகுதியில் உள்ள மேடுகளை கடல் அலை மணல்களை இழுத்து செல்லப்படுகிறது. தற்போது அந்த பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பைபர் வள்ளங்களை கடலுக்குள் கொண்டு செல்ல மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டது