என் மலர்
நீங்கள் தேடியது "தி.மு.க.- விடுதலை சிறுத்தை"
- தி.மு.க.- விடுதலை சிறுத்தை கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
- அலெக்ஸ், சகோதரர் ஜெயக்குமார், சதீஷ்குமார், சதீஷ் சகோதரர் மற்றும் சிறுத்தை ராஜா உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை வைத்தியநாதபுரம், கங்காணி சந்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி. சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் எஸ்.எஸ்.காலனி பழைய போலீஸ் நிலையம் அருகில், கட்சிக்கொடியேற்ற முயன்றனர்.
இதற்கு அதே பகுதியை சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கினர். இது தொடர்பாக சதீஷ்குமார், எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ரமேஷ் (48), மணிகண்டன், கார்த்திக், அவரது சகோதரர் மற்றும் சிலரை தேடி வருகிறார்.
இதே வழக்கில் ராஜீவ்காந்தி நகர், ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ், சகோதரர் ஜெயக்குமார், சதீஷ்குமார், சதீஷ் சகோதரர் மற்றும் சிறுத்தை ராஜா உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.