என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹீட்டர்"
- கை வைத்து பக்கெட்டில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என பார்த்தபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
- இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஏசு ராஜேந்திரன். இவரது மனைவி பிரேமா (வயது 48) நேற்று காலை குளிப்ப தற்காக ஹீட்டரை ஆன் செய்து உள்ளார். சிறிது நேரம் கழித்து வழக்கம் போல கை வைத்து பக்கெட்டில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என பார்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது மின்சாரம் தாக்கியதில் பிரேமா தூக்கி வீசப்பட்டார். அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பிரேமா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது கணவர் ஏசு ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.