search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புளோரா சைனி"

    • கஜேந்திரா, குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் புளோரா சைனி.
    • பிரபல தயாரிப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புளோரா சைனி புகார் தெரிவித்து உள்ளார்.

    தமிழில் விஜயகாந்தின் 'கஜேந்திரா' படத்தில் அறிமுகமான புளோரா சைனி தொடர்ந்து குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புளோரா புகார் தெரிவித்து உள்ளார்.

     

    புளோரா சைனி

    புளோரா சைனி


    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும்போது, "நான் 20 வயதில் சினிமாவில் உயர்ந்த நிலையில் இருந்தேன். இந்தியில் 10 படங்களுக்கு மேல் நடித்தேன், விளம்பரங்களிலும் நடித்தேன். பின்னர் ஒரு தயாரிப்பாளரிடம் காதலில் விழுந்ததால் எனது வாழ்க்கை மாறிப்போனது. அந்த தயாரிப்பாளர் என்னை தவறாக பயன்படுத்தினார். கடுமையாக அடித்து காயப்படுத்தினார். எனது போனை பிடுங்கி கொண்டார்.

    14 மாதங்கள் சினிமாவில் என்னை நடிக்க விடாமல் சித்ரவதை செய்தார். மற்றவர்களிடம் பேசவிடாமல் தடுத்தார். அவரிடம் நரக வேதனையை அனுபவித்தேன். இறுதியில் அந்த தயாரிப்பாளரை விட்டு ஓடிவந்து எனது பெற்றோருடன் சேர்ந்து விட்டேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

    • கஜேந்திரா, சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க உள்ளிட்ட படங்களில் நடித்தவர் புளோரா சைனி.
    • தனது முன்னாள் காதலன் தன்னை எப்படி அடித்து பாலியல் துன்புறுத்தினார் என்பது குறித்து புளோரா சைனி மனம் திறந்து பேசினார்.

    பிரபல நடிகை புளோரா சைனி, தமிழில் கஜேந்திரா, சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க உள்பட தெலுங்கு, கன்னடம், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். புளோரா சைனி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முன்னாள் காதலனால் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டது குறித்து மனம் திறந்து பேசினார். "ஆரம்பத்தில் அவர் மிகவும் இனிமையாக இருந்தார். மிகவும் நல்லவர், அவர் ஒரு நல்ல பையன் என்று என் பெற்றோரும் ஏமாற்றப்பட்டனர்.

     

    புளோரா சைனி

    புளோரா சைனி

    ஷ்ரத்தா விஷயத்திலும், அதுதான் நடந்தது. அவர் என்னை முதலில் என் குடும்பத்தில் இருந்து துண்டித்துவிட்டார். நானும் என் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். ஆனால் அவருடன் சென்ற ஒரு வாரத்தில், நான் அவமானப் படுத்தப்பட்டேன், அவன் ஏன் என்னை திடீரென்று அடிக்கிறான் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நாள் இரவு, அவர் என்னை அடித்து உதைத்தார். எனது தாடை உடைந்தது.

     

    புளோரா சைனி

    புளோரா சைனி

    அவர் அன்றிரவு உன்னைக் கொன்றுவிடுவேன் என்று என்னை மிரட்டினார். அந்த நொடியில், எனது அம்மாவின் குரல் என் காதுகளில் எதிரொலித்தது, அத்தகைய தருணத்தில் நீங்கள் ஓட வேண்டும் ஆடை இருக்கிறதா இல்லையா என்று கூட நினைக்க வேண்டாம். உங்களிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்படித்தான் நான் என் வீட்டிற்கு ஓடினேன், நான் திரும்பப் போவதில்லை என்று முடிவு செய்தேன். பின்னர் ஒருவழியாக எனது காதலனுக்கு எதிராக புகார் அளித்தேன் என கூறினார். டெல்லியில் நடந்த அதிர்ச்சியூட்டும் ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கை போல் தனது வழக்கு இருந்ததாக கூறினார்.

    ×