என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்குழு கண்காட்சி"

    • ஓ.பன்னீர்செல்வம் கூட்டும் பொதுக்குழு கண்காட்சி கூட்டமாகவே இருக்கும் என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
    • நிர்வாகிகளும் இல்லை, தொண்டர்களும் இல்லை, கட்சியும் இல்லை.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மக்கள் விரோத அரசு ஆண்டு கொண்டிருக்கிறது. மக்களை வஞ்சிக்கும் வகையில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத போக்கை தி.மு.க. அரசு செய்து வருகிறது. இதனை கண்டித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் வருகிற 9, 13, 14 ஆகிய நாட்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து ஓ.பி.எஸ். உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அவரிடம் தற்போது கட்சி நிர்வாகிகளும் இல்லை. தொண்டர்களும் இல்லை. கட்சியும் இல்லை. இதை உணர்ந்ததால் தான் அவருக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாட வழக்கறிஞர்கள் இல்லாமல், இலவச சட்ட மையத்தை நாட வேண்டிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வம் கூட்டப் போகும் பொதுக்குழு வெறும் கண்காட்சி கூட்டமாகவே இருக்கப்போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே. சந்திரன், இலக்கிய அணி செயலாளர் மோகன் தாஸ், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் நாகரத்தினம், பாலா, பொன்.முருகன், என்.எஸ்.பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×