search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதும க்களுக்கு இனிப்பு"

    • 14 லட்சம் மதிப்பிலான புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செ ல்வம் பரிந்துரைத்தார்.
    • ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை நேற்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    கடலூர்:

    வடலூர் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தடையில்லா குடிநீர் வினியோகம் செய்வதற்கு பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு ஆபத்தாரணபுரம் கிழக்குத் தெருவில் என்.எல்.சி., சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செ ல்வம் பரிந்துரைத்தார்.

    அத ன்பேரில் பேரில் மாவட்டக் கல்விக் குழுத் தலைவரும் குறிஞ்சி ப்பாடி ஒன்றிய செயலா ளருமான சிவக்குமார் ஆகியோர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை நேற்று தொடங்கி வைத்து, பொதும க்களுக்கு இனி ப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செ ல்வன், 3வது வார்டு நகர மன்ற உறுப்பினர் இளவரசன், கிளைக் கழக செயலாளர் ஆனந்த ராஜன் மற்றும் நகரமன்ற உறுப்பி னர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

    ×