search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட் ஊழியர்"

    • பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் தேர்வானதாகவும், அந்த தேர்வுகள் டெல்லி கல்வி வாரியம் நடத்தியதாகவும் தெரிவித்து உள்ளார்.
    • பணிக்கு சேர்ந்த மற்றவர்களின் கல்வி சான்றிதழின் உண்மை தன்மையை கண்டறியவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகாவைச் சேர்ந்தவர் பிரபுலட்சுமிகாந்த் லோகரே (23). 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் கொப்பல் நீதிமன்றத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கோர்ட்டுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பியூன் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தூய்மை பணியாளராக வேலைபார்த்து வரும் பிரபுலட்சுமிகாந்த் லோகரே தான் 10-வது படித்து முடித்ததாக கூறி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தார். அதில் அவர் 625 மதிப்பெண்களுக்கு 623 மதிப்பெண் (99.5 சதவீதம்) பெற்றதாக இடம் பெற்றிருந்தது.

    இதன் அடிப்படையில் பிரபுலட்சுமிகாந்த் லோகரேவுக்கு கோர்ட்டில் ஊழியராக வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தான் தூய்மை பணியாளராக வேலை பார்த்த கோர்ட்டிலேயே ஊழியராக பணியை தொடங்கினார். இந்த நிலையில் அவர் படிப்பதற்கும், எழுதுவதற்கும் திணறியது நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த ஊழியரை வரவழைத்து நீதிபதி முன்பு வாசிக்க வைத்தனர். அப்போதும் அவர் திணறினார்.

    இதையடுத்து அவரது கல்வி சான்றை பார்த்தபோது 7-ம் வகுப்பில் இருந்து அவர் நேரடியாக 10-ம் தேர்வு எழுதி அதில் 99.5 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனாலும் அவருக்கு கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் படிக்கவோ, எழுதவோ தெரியாததால் அவரது கல்விச் சான்றிதழ் தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மோசடி நபர்களால் திறமையான மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் இதேபோல் பணிக்கு சேர்ந்த மற்றவர்களின் கல்வி சான்றிதழின் உண்மை தன்மையை கண்டறியவும் உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் போலீசார் பிரபுலட்சுமி காந்த் லோகரேவின் கையெழுத்தையும், 10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாளில் உள்ள கையெழுத்தையும் ஒப்பிட்டு பார்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே பிரபுலட்சுமிகாந்த் லோகரே தான் 2017, 2018-ம் ஆண்டில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் தேர்வானதாகவும், அந்த தேர்வுகள் டெல்லி கல்வி வாரியம் நடத்தியதாகவும் தெரிவித்து உள்ளார். 10-ம் வகுப்பு தேர்வில் 99.5 சதவீத தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த கோர்ட்டு ஊழியருக்கு எழுத, படிக்க தெரியாத சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாலதி திண்டிவனம் கோர்ட்டில் தட்டச்சு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
    • மர்ம நபர்கள் மாலதியின் தங்கச் செயினை பறிக்க மீண்டும் முயற்சி செய்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மாலதி,அவரது சகோதரி மனோ சித்ரா. மாலதி திண்டிவனம் கோர்ட்டில் தட்டச்சு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது சகோதரி மனோ சித்ரா குழந்தைகள் நல அலுவலராக உள்ளார்.இந்த நிலையில் 2 பேரும் பணியை முடித்துவிட்டு இரவு 8.30 மணி அளவில் திண்டிவனம் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் கோபாலபுரம் சென்று கொண்டிருந்தனர். 

    அப்பொழுது இவர்களை மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையம் அருகே வரும்போது மாலதி அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயற்சி செய்தனர்.மாலதி மற்றும் மனோ சித்ரா 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். தொடர்ந்து மர்ம நபர்கள் மாலதியின் தங்கச் செயினை பறிக்க மீண்டும் முயற்சி செய்தனர்.மாலதி தங்கச் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். அப்போது அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் மாலதிக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையம் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து தாமதமாக வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • கோர்ட் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • கையெழுத்து வாங்க முருகன் என்பவரை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வெங்கடேசன் இளநிலை கட்டளை நிறை வேற்றுபவராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வழக்கு தொடர்பாக நோட்டீஸ் வழங்குவதற்காக கடலூர் தென்னம்பாக்கத்தை சேர்ந்த செல்வி என்பவரிடம் நோட்டீசை கொடுத்து அசலில் கையெழுத்து வாங்க, முருகன் என்பவரை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்.

    அப்போது செல்வியின் கணவர் விஸ்வநாதன், வெங்க டேசனை வழி மறித்து அவரது மனைவி கையெழுத்து போட்டு கொடுத்த நகலை பிடுங்கி கொண்டதுடன் அவர் கையில் வைத்திருந்த நீதிமன்ற செல்போன் மற்றும் அவருடைய மோட்டார் சைக்கிள் சாவியினையும் பிடுங்கி மிரட்டி நீதிமன்ற பணியை செய்யவிடாமல் தடுத்து ள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் தூக்கணா ம்பாக்கம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்ததன் பேரில் விஸ்வநாதன் (வயது 55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×