என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம் காய்ச்சி"

    • கோட்டபாளையம் காரப்பாடியை சேர்ந்த செந்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
    • பின்னர் போலீசார் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே கோட்டபாளையம் குளியங்காட்டு தோட்டம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெற்று வருவதாக புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ரபி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கோட்டபாளையம் காரப்பாடியை சேர்ந்த செந்தில் (42) என்பதும், சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 8 லிட்டர் சாராயம், 200 லிட்டர் சாராய ஊறல், ஊறல் போட பயன்படுத்திய டிரம், குடம், பாத்திரம் மற்றும் ரொக்கப்பணம் ரூ.3200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போலீசார் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் செந்தில் மீது ஏற்கனவே சாராயம் காய்ச்சிய வழக்கு மற்றும் நாட்டுது ப்பா க்கி வைத்தி ருந்த வழக்கும் உள்ளது குறிப்பி டத்தக்கது.

    ×