என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ல் கங்கா ஆரத்தி"

    • திருவிழாவையொட்டி, சப்த நதி தீர்த்தம் அம்மன் சன்னதி முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது
    • விழாவின்போது தெப்பக்குளத்தை சுற்றி 3333 அகல்விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

    கோவில்பட்டி:

    இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோவில் அகத்திய மாமுனிவரால் தோற்றுவிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு மஹா கங்கா ஆரத்தி திருவிழாவையொட்டி, 7 குடங்களில் சப்த நதி தீர்த்தம் அம்மன் சன்னதி முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதையடுத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தெப்பக்குளம் அருகேயுள்ள ஆதி குறைதீர்க்கும் விநாயகர் கோவிலில் மகா கணபதி பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புன்னியாகவாசனம் நடைபெற்றது. தொடர்ந்து சப்த நதி நீரை கும்பத்தில் வைத்து கும்ப பூஜை நடைபெற்றது. பின்னர் கும்பத்தை கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் தெப்பத்தில் தீர்த்த அபிஷேகம் மற்றும் புஷ்பம் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மஹா கங்கா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, தெப்பக்குளத்தை சுற்றி 3333 அகல்விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

    ஏற்பாடுகளை இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச்செயலர் பரமசிவம், மாவட்ட செயலர் அய்யம்பெருமாள் ஆகியோர் தலைமையில், நிர்வாகிகள் செய்திருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×