search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது விநியோகம்"

    • பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (8-ந் தேதி) கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம் வட்டம்- புல்லங்குடி (நியாய விலைக்கடை, ராமேசுவரம் வட்டம்-அரியாங்குண்டு - (இ-சேவை மைய கட்டிடம்), திருவாடானை வட்டம் - புதுப்பட்டினம் (நியாய விலைக்கடை), பரமக்குடி வட்டம் - வாலங்குடி (இ-சேவை மைய கட்டிடம்.

    முதுகுளத்தூர் வட்டம் -வெங்கலக்குறிச்சி (நியாயவிலைக்கடை), கடலாடி வட்டம் வாலி நோக்கம் (நியாய விலைக்கடை), கமுதி வட்டம்- தலவநாயக்கன்பட்டி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி).

    கீழக்கரை வட்டம் குளபதம் (நியாய விலைக் கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் - ஆப்பிராய் (நியாய விலைக் கடை) ஆகிய இடங்களில் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    இதில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழை திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை,நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.மேலும் நியாயவிலைக் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தால் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • ரேசன்கடை பொறுப்பாளர் கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து தாலுகாவிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 9 கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

    ராமநாதபுரம் அருகே உள்ள வாணி கிராம ரேசன் கடையில் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் தலைமையில் நடந்தது. தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்) தமிம்ராசா முன்னிலை வகித்தார். ரேசன் ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க 6 மனுக்களும், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் உட்பட 28 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    முதுநிலை வருவாய் அலுவலர் சிவக்குமார் ஆதி, ரேசன்கடை பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • ராமநாதபுரம் மாவட்ட பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை (10-ந்தேதி) கீழ்க்கண்ட கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம் வட்டம்-வாணி (நியாயவிலைக்கடை), ராமேசுவரம் வட்டம்-மாங்காடு-(சமுதாயக் கட்டிடம்), திருவாடானை வட்டம்-சோழியக்குடி (நியாய விலைக்கடை).

    பரமக்குடி வட்டம்-வழிமறிச்சான் (இ-சேவை மையக்கட்டிடம்), முதுகுளத்தூர் வட்டம்-மீசல் (இ-சேவை மையக் கட்டிடம்), கடலாடி வட்டம்-ஒருவானேந்தல் (நியாயவிலைக்கடை கட்டிடம்).

    கமுதி வட்டம்-பேரூர் (ஆசாரி திருமண மகால் கட்டிடம்), கீழக்கரை வட்டம்-கீழதில்லையேந்தல் (நியாயவிலைக்கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்-கொத்தியார்கோட்டை (நியாயவிலைக் கடை) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    நியாய விலைக்கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை பொது மக்கள் இந்த முகாம்களில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 வட்ட ங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இந்த குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×