search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லாரி இசை"

    • திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் ராகுவிற்குரியஸ்தலமாக போற்றப்படுகிறது.
    • தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் ராகுவிற்குரியஸ்தலமாக போற்றப்படுகிறது.

    இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்கியாக, 7ம் நாளான இன்றிரவு, உற்சவர் நாகநாதசுவாமி, கிரிகுஜாம்பிகை, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    முன்னதாக, சீர்வரிசைகள் சமர்பித்தலும், மாலை மாற்றும் வைபவமும் பின்னர் ஊஞ்சலில் நலுங்கு உற்சவமும் நடைபெற்றதை தொடர்ந்து, சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஜபிக்க, யாகம் வளர்த்து, நாதஸ்வர மேள தாளம் முழங்க, உதிரி மலர்கள் தூவி, மங்கல ஞான் பூட்டும் வைபவமும் நடைபெற்றது.

    இதில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான 10ம் தேதி சனிக்கிழமை திரு தேரோட்டமும் தொடர்ந்து 10ம் நாளான 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மல்லாரி இசை திருவிழா அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் திருக்கோவிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் ஒருசேர எழுந்தருள கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது பிறகு 11ம் நாளான 13ம் தேதி திங்கட்கிழமை விடையாற்றி உற்சவத்துடன் இவ்வாண்டிற்காண கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா நிறைவு பெறுகிறது.

    ×