search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேவை குறைபாடு"

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • தவணைகள் முடிந்த பிறகும் ஆட்டோவின் பெர்மிட் திரும்ப கொடுக்கவில்லை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்தவர் சுந்தர். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஆட்டோ வாங்குவதற்காக கடன் வாங்கினார். இதற்காக அவர் தவணைகள் மூலம் வட்டியும் அசலுமாக கடன் தொகை முழுவதையும் செலுத்தி விட்டார். ஆனால் தவணைகள் முடிந்த பிறகும் ஆட்டோவின் பெர்மிட் திரும்ப கொடுக்கவில்லை. எனவே வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் கன்னியாகுமரி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ஆட்டோவின் பெர்மிட், நஷ்ட ஈடு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2 ஆயிரத்து 500 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    நாகர்கோவில் :

    கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் ரவிசாம் பேனர்ஜி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது சேமிப்பு கணக்கை வைத்துள்ளார். இந்த நிலை யில் பணத்தேவைக்காக நாகர்கோவிலில் உள்ள மற்றொரு தேசிய மயமாக்கப் பட்ட வங்கியின் ஏ.டி.எம்.மில் ரூ.5 ஆயிரம் எடுத்த போது பணம் வரவில்லை. ஆனால் அவரது செல்போ னுக்கு பணம் எடுக்கப்பட்ட தாக குறுந்தகவல்கள் வந்துள்ளது.

    உடனே தான் சேமிப்புக் கணக்கு வைத்திருந்த வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் 2 நாட்களில் அந்த பணம் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப் பட்டு விடும் என்று கூறியுள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்க வில்லை.

    இதனால் ரவி சாம்பேனர்ஜி சம்பந்தப் பட்ட வங்கிக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பின்னரும், உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ரவிசாம்பேனர்ஜி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தேசிய மய மாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி நஷ்ட ஈடுடாக ரூ.15 ஆயிரமும், வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    • குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான்கடையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் பெங்களுரிலுள்ள தனியார் கொரியர் நிறுவனம் மூலம் தனக்கு மருந்து பார்சல் அனுப்புமாறு அங்குள்ள ஒரு மருத்துவரிடம் கூறியுள்ளார்.

    அவரும் மருந்தை கொரியர் மூலம் நாகர்கோ விலுக்கு அனுப்பியுள்ளார். நாகர்கோவிலுள்ள அதே தனியார் கொரியர் நிறுவனம் ராஜ்குமாரின் வீட்டு முகவரியை சரியாக விசாரிக்காமல் மருந்து பார்சலை பெங்களுரூக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டனர்.

    இதுகுறித்து கொரியர் நிறுவனத்திடம் கேட்டதற்கு சரியான பதில் கொடுக்க வில்லை. இதனால் வழக்கறி ஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகி யோர் கொரியர் நிறுவ னத்தின் சேவை குறை பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர் வோருக்கு ரூ.10,000 நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.3,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியை சேர்ந்த டாக்டர் தம்பதியினர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.

    இதற்காக தங்களது சொத்து பத்திரத்தை அடமானமாக பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்த கடன் முழுவதையும் செலுத்தி விட்டு பின்பு வேறு ஒரு தனியார் நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளனர். ஆனால் முதலில் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனம் அடமானமாக கொடுத்த அசல் பத்திரத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர்கள் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.1 லட்சம் வழக்கு செலவு தொகை ரூபாய் 7,500 மற்றும் திருப்பி கொடுக்காத அசல் பத்திரத்தின் நகல் பத்திரத்தை உரிய வழி முறைகளை பின்பற்றி ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திர விட்டனர்.

    நாகர்கோவில்:

    கணபதிபுரத்தைச் சார்ந்த வக்கீல் துரைராஜ் என்பவர் கணபதிபுரத்திலுள்ள ஒரு தனியார் மரபர்னிச்சர் கடையில் ரூ. 24,000 முன் பணம் செலுத்தி ஒரு அலுவலக டேபிள் ஒன்று செய்து தருமாறு கூறியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட கடைக்காரர் 20 நாட்களில் டேபிள் செய்து தந்து விடுவதாக கூறியுள்ளார்.

    ஆனால் ஒத்துக் கொண்ட படி செய்து தரவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் அவர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ். உறுப்பினர் சங்கர் ஆகியோர் தனியார் மர பர்னிச்சர் கடையின் சேவை குறைப் பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோ ருக்கு ரூ. 15,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.மேலும் ஏற்கனவே முன்பணமாக செலுத்தப்பட்ட தொகை ரூ.24,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 3,000 ஆகியவற்றையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திர விட்டனர்.

    • நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
    • அலைக்கழித்ததால் வழக்கு தொடர்ந்த நுகர்வோர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குலசேக ரன்புதூர் பகுதியைச் சேர்ந்த வர் பாலமுருகன். இவர் தோவாளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து கடன் வாங்கி இருந்தார்.

    இந்த நகைைய பாலமுருக னுக்கு தெரியாமல் நிதி நிறுவனம் ஏலத்திற்கு விட முயன்றதாக கூறப்படுகிறது. இது பற்றி தெரியவந்ததும் பாலமுருகன் நகையை திருப்ப பணத்துடன் சென்றார்.

    அப்போது அவரை அலைக்கழித்ததுடன், பணம் செலுத்திய நாளில் இருந்து 20 நாட்கள் கழித்து தான் நகையை திருப்பி தரமுடியும் என நிதி நிறுவனம் கூறிய தாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், நிதி நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார். அதன்பிறகும் உதிய பதில் கிடைக்காததால், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், பாலமுருகன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பி னர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக் காட்டி பாலமுருக னுக்கு ரூ.1500 நஷ்ட ஈடு மற்றும் வழக்குச் செலவு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 20 ஆயிரம் வழங்க உத்தர விட்டனர்.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • இன்சூரன்சு நிறு வனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் அருள் ராஜேஸ். இவர் ஒரு தனியார் இன்சூரன்சு நிறுவனத்திடம் 'ஹெல்த் இன்சூரன்சு பாலிசி' எடுத்திருந்தார்.

    அதன் பின்னர் உடல் நிலைக் குறைவால் பாதிக்க ப்பட்ட அருள் ராஜேஸ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று உள்ளார். சிகிச்சைக்காக ரூ. 24,450 செலுத்திய அவர், இந்த பணத்தை இன்சூரன்சு நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் கேட்டார். ஆனால் இன்சூரன்சு நிறு வனம் சரியான காரண ங்களை கூறாமல் சிகிச்சை க்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அருள் ராஜேஸ் வழக்க றிஞர் மூலம் இன்சூரன்சு நிறுவனத்திற்கு நோட்டீசு அனுப்பினார்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் இன்சூரன்சு நிறுவனத்தின் சேவை குறை பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சிகிச்சை க்காக ஏற்கனவே செலவ ழித்த ரூ. 24 ஆயிரத்து 785, நஷ்ட ஈடாக ரூ. 20 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம், ஆக மொத்தம் ரூ.59ஆயிரத்து 755-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    ×